வெளியிடப்பட்ட நேரம்: 16:05 (01/05/2018)

கடைசி தொடர்பு:16:05 (01/05/2018)

ஸ்டாலினை சந்திரசேகர ராவ் சந்தித்தது ஏன்? கனிமொழி விளக்கம்

குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாகவே மத்தியில் ஆட்சிமாற்றம் வந்தால் வரவேற்கத்தக்கது என்றார் கனிமொழி

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசியது ஏன் என்பது கனிமொழி விளக்கம் அளித்துள்ளார்.

கனிமொழி

தி.மு.க. எம்.பி கனிமொழி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இன்று கன்னியாகுமரி வந்தார். அப்போது. செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தி.மு.க தொழிலாளர் நல ஆட்சியைக் கொடுத்துள்ளது. கருணாநிதி முதல்வராக இருந்தபோது தொழிலாளர்களின் அனைத்து கோரிக்கைகளையும் அவர்கள் கேட்பதற்கு முன்பே நிறைவேற்றி கொடுத்திருக்கிறார். ஆனால், இன்று நடக்கும் ஆட்சியில் தொழிலாளர்களும் உழைக்கும் மக்களும் விவசாயிகளும் வஞ்சிக்கப்படுகிறார்கள். தொழிலாளர்களுக்கு நீதியும் நியாயமும் கிடைக்க இந்த ஆட்சி மாற்றப்பட வேண்டும். தமிழகத்தில் விடியல் பிறக்க வேண்டும். அதுதான் உண்மையான ஒரு மே தின விழாவாக அமையும்.

தமிழகத்தை வஞ்சிக்கக்கூடிய ஆட்சி மத்தியில் தேவை இல்லை. இப்படிப்பட்ட ஒரு பிரதமர் வேண்டாம் என்பதே தி.மு.க-வின் நிலைப்பாடு. அனைத்து மாநிலங்களையும் மக்களையும் மதிக்கக்கூடிய ஒரு பிரதமர் வர வேண்டும் என்பதே தி.மு.க-வின் கோரிக்கையாக உள்ளது. குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாகவே மத்தியில் ஆட்சிமாற்றம் வந்தால் வரவேற்கத்தக்கது. தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஸ்டாலினை சந்தித்தது மாநில உரிமைகள் குறித்த பேச்சுவார்த்தை நடத்தத்தான். தேர்தல் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை இல்லை என ஏற்கெனவே கூறப்பட்டுள்ளது. மூன்றாவது அணி என்பது தேர்தலுக்கானது அல்ல எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க