'குட்கா ஆதாரத்தை அழிக்கும் தமிழக அரசு!' - ஸ்டாலின் பகீர் | Gutka Scam: MK Stalin Slams TN Governor

வெளியிடப்பட்ட நேரம்: 17:25 (01/05/2018)

கடைசி தொடர்பு:17:25 (01/05/2018)

'குட்கா ஆதாரத்தை அழிக்கும் தமிழக அரசு!' - ஸ்டாலின் பகீர்

ஸ்டாலின்

குட்கா போதைப்பொருள் முறைகேட்டில் ஆதாரங்களை அழிக்க அ.தி.மு.க அரசு முயல்வதாகத் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பகீர் குற்றம்சாட்டை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை கண்ணம்பாளையத்தில் குட்கா தயாரிப்பு தொழிற்சாலையைக் கண்டிபிடித்த விவகாரத்தில் வெளிப்படையான சோதனை நடத்தக் கோரி அறவழி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க-வினர் மீது, பொய் வழக்குகளைப் பதிவு செய்திருக்கும் குட்கா ஊழல் அ.தி.மு.க அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

குட்கா வழக்குக்கு மிகவும் முக்கியமான ஆதாரமாகத் திகழும் இதுபோன்ற உற்பத்தி ஆலைகளில் நடத்தப்படும் ரெய்டுகள், திட்டமிட்டு உண்மைகளை மறைக்கவே நடைபெறுகிறது. எனவே, வெளிப்படையான சோதனை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி அறவழிப்போராட்டம் நடத்திய தி.மு.க-வினர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குட்கா

குட்கா வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்ற தீர்ப்பின் ஈரம் காய்வதற்குள், அதைச் சீர்குலைத்து திசைதிருப்பும் விதத்தில் இதுபோன்றதொரு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.