தசாவதார நிகழ்ச்சியில் எழுந்தருளும் கள்ளழகர்!

இன்று இரவு விடிய விடிய நடைபெறும் தசாவதார நிகழ்ச்சியில் கள்ளழகர் எழுந்தருள்கிறார்

இன்று இரவு விடிய விடிய நடைபெறும் தசாவதார நிகழ்ச்சியில் கள்ளழகர் எழுந்தருள்கிறார். அதைக்காண மக்கள் மதுரையில் குவிந்து கொண்டிருக்கிறார்கள்.

மதுரையில் நடைபெற்றுவரும் சித்திரைத் திருவிழாவில் லட்சக்கணக்கான மக்களின் கோவிந்தா கோஷத்துக்கிடையே நேற்று வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர், அங்கு மக்களுக்கு அருள்பாலித்துவிட்டு அங்கிருந்து ராமராயர் மண்டபம் சென்றார். அவரை குளிர்விக்கும் விதமாகப் பக்தர்களின் தீர்த்தவாரி செய்தனர். அதன் பின்பு, இரவு வண்டியூர் சென்று வீரராகவப் பெருமாள் கோயிலில் எழுந்தருளினார்.

தசாவதார நிகழ்


இன்று காலை ஆறு மணிக்கு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் திருமஞ்சனம் ஆகி ஏகாந்த சேவையில் உலா வந்தார். அதன் பின்பு சேஷ வாகனத்தில் எழுந்தருளி தேனூர் மண்டபத்துக்கு காலை 11 மணிக்கு வந்தார். அதன் பின்பு கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்கு பின் மதியம் அனுமார் கோயிலில் எழுந்தருளினார். இங்கு மக்களுக்கு ஆசி வழங்கிவிட்டு இன்று இரவு மீண்டும் ராமராயர் மண்டபம் வரும் கள்ளழகர்  இரவு 11 மணிக்கு எழுந்தருள்கிறார். இங்கு விடிய விடிய தசாவதார நிகழ்ச்சி நடைபெறுகிறது. அழகர் மலைக்குத் திரும்பிச் செல்கிற  3-ம் தேதி வரை மதுரையில் தொடர்ச்சியான நிகழ்ச்சிகளில் கள்ளழகர் எழுந்தருள்கிறார். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!