நிர்மலாதேவி வழக்கும் ஓய்வெடுக்கும் விசாரணைக் குழுக்களும்!

கடந்த ஏப்ரல் 16-ம் தேதி அருப்புக்கோட்டை காவியன் நகரில் வில்லங்க ஆடியோ விவகாரத்தில்

அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகளைத் தவறாக வழிநடத்தியதாக எழுந்த புகாரில் பேராசிரியை நிர்மலா தேவி கடந்த ஏப்ரல் 16-ம் தேதி செய்யப்பட்டபோது தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இப்போதோ அந்த வழக்கு விசாரணை ஆழ்ந்த உறக்கத்துக்குச் சென்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

நிர்மலாதேவி வழக்கு


ஆளுநர் பெயரை நிர்மலா தேவி சம்பந்தப்படுத்தியதால் இந்த விவகாரத்தை விசாரிக்க ஆளுநரே ஓய்வு பெற்ற ஐ.எ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணைக்குழுவை நியமித்தார். உடனே தமிழக அரசும் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றியது. இரண்டு விசாரணைக் குழுக்களும் படு ஸ்பீடாக விசாரணையை நடத்தினார்கள். பலரையும் விசாரித்தார்கள். நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகியோரை சி.பி.சி.ஐ.டி கஸ்டடி எடுத்து விசாரணை நடத்தியது. அவர்களுடன் போன் தொடர்பில் இருந்த நூறுக்கும் மேற்பட்டவர்களை விசாரணை செய்தார்கள். தனியார் கல்லூரி நிர்வாகிகள், ஆசிரியர்கள் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம்  விசாரணை நடத்தினார்கள். இப்படி போய்க்கொண்டிருந்த விசாரணை, கடந்த சில நாள்களாகத் தூங்கி வழிந்துகொண்டிருக்கிறது.

நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றக் காவலுக்குச் சென்றுவிட்ட பிறகு, விருதுநகர் சி.பி.சி.ஐ.டி அலுவலகம் காத்தாடுகிறது. இந்த மூவருடன் வழக்கை முடித்துக்கொள்ள முடிவு செய்துவிட்டார்கள். நிர்மலா தேவியுடன் தொடர்பில் இருந்ததாகச் சொல்லப்படும் காமராஜர் பல்கலைக்கழகத்திலுள்ள முக்கிய புள்ளிகள் சென்னையிலுள்ள உயர் அதிகாரிகள் யாரையும் இந்த வழக்குக்குள் இழுக்க மாட்டார்களாம். இம்மூவர் மட்டும்தான் சதிகாரர்கள் என்று வழக்கு முடிக்கப்படுமாம். விசாரணை அதிகாரி சந்தானமும் இரண்டு தடவை மதுரை, அருப்புக்கோட்டைக்கு  விசாரணைக்கு வந்துவிட்டு சென்னை சென்றுவிட்டார். அடுத்த விசாரணை எப்போது என்று தெரியவில்லை. உயர் கல்வித்துறையில் பரவிவரும் புற்றுநோய் போன்ற இவ்விவகாரத்தை, களிம்பு போட்டு குணமாக்கிவிட்டதாக அரசு தரப்பு அறிவிக்கவுள்ளதாகச் சொல்லப்படுகிறது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!