வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (02/05/2018)

கடைசி தொடர்பு:12:25 (02/05/2018)

விஜய் சேதுபதிக்கு சோறு ஊட்டும் சிம்பு! - வைரலாகும் புகைப்படம்

'காற்று வெளியிடை' படத்துக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் திரைப்படம், 'செக்கச் சிவந்த வானம்'.  மணிரத்னம் ஒரு படத்தை இயக்குகிறார் என்றாலே, படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகவே காணப்படும். இந்நிலையில், இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த்சாமி, அருண் விஜய் என நான்கு ஹீரோக்கள் நடிக்கின்றனர். படத்தில் ஹீரோயினாக ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராய் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இது தவிர, படத்தின் முக்கிய கேரக்டரில் பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, மன்சூர் அலிகான், தியாகராஜன் போன்றோரும் நடிக்கின்றனர். இதனால், படம்குறித்து எக்கச்சக்கமான எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர். 

விஜய்சேதுபதி

 

இந்நிலையில்,  சினிமா ஸ்டிரைக் முடிவுக்கு வந்தவுடனே, இந்தப் படத்தின் படப்பிடிப்பு செம பிஸியாக நடந்துவருகிறது. தற்போது, இந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று, இணையத்தில் வைரலாகிவருகிறது. அந்தப் புகைப்படத்தில் சிம்பு, விஜய் சேதுபதிக்கு ஒரு ஸ்பூனால் சாப்பாடு ஊட்டிவிடுகிறார். இது, சினிமா படப்பிடிப்பின் பிரேக் டைமில் எடுக்கப்பட்ட புகைப்படமா இல்லை; படத்தின் ஷாட்டுக்காக எடுக்கப்பட்ட படமா என்று தெரியவில்லை. இருந்தும், இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க