வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (02/05/2018)

கடைசி தொடர்பு:12:50 (02/05/2018)

வாய்ப்பு கிடைத்தால் மோடியைச் சந்தித்துப் பேசுவேன்! - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி

'வாய்ப்பு கிடைத்தால் பிரதமர் மோடியைச் சந்தித்து காவிரி பிரச்னை குறித்துப் பேசுவேன்’ என்று டெல்லியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  

எடப்பாடி பழனிசாமி
 

வரும் அக்டோபர் 2-ம் தேதி, மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த தினத்தை நாடு முழுவதும் பிரமாண்டமாகக் கொண்டாட மத்திய கலாசாரத்துறை திட்டமிட்டு வருகிறது. இதுதொடர்பாக இன்று டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பங்குபெறும் இந்தக் கூட்டத்தில் பங்குபெறத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று காலை விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றார். இன்று மாலை 5 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் கூட்டம் நடக்கிறது. இன்றிரவு அங்கேயே தங்கிவிட்டு நாளைச் சென்னை திரும்புகிறார்.

 டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பழனிசாமி,  'உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் என்று நம்புகிறேன். இன்று வாய்ப்பு கிடைத்தால் பிரதமர் மோடியைச் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து வலியுறுத்துவேன். இது தொடர்பாக வேறு யாரையும் சந்திக்கும் திட்டம் இல்லை’ என்று தெரிவித்தார். காவிரி தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க