துணை கலெக்டர் வேஷம் போட்டு கைதான பி.இ பட்டதாரி!

திருவள்ளூர் மாவட்ட துணை கலெக்டர்  என்று  கனிம வளத்துறையை மிரட்டிய  இளைஞரை 

திருவள்ளூர் மாவட்ட துணை கலெக்டர்  என்று  கனிம வளத்துறையை மிரட்டிய  இளைஞரை  விருதுநகர் காவல்துறை கைது செய்துள்ளது.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, திருவண்ணாமலையில் சேதுராமன் என்பவர் தன்னுடைய செங்கல் சூளைக்கு  அனுமதியில்லாமல் மூன்று டிராக்டரில் செம்மண் அள்ளிச் சென்றிருக்கிறார். இரவில் சோதனையில் ஈடுபட்ட கனிமவளத்துறை அதிகாரிகள், செம்மண் அள்ளுவதற்கான  அனுமதி இருக்கிறதா என்பதை சேதுராமனிடம் விசாரித்துள்ளனர். 

துணை கலெக்டர்

கிராவல் மண் அள்ளுவதற்கான  அனுமதியை வைத்து, தொடர்ச்சியாக செம்மண் அள்ளிவருவதைக் கண்டுபிடித்தனர்.  உடனே, மூன்று டிராக்டர்களையும் கைப்பற்றி, ஸ்ரீவில்லிப்புத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.  இந்த நிலையில், விருதுநகர் கனிம வளத்துறை அலுவலகத்துக்கு நேற்று வந்த சேதுராமனின் மகன் சிவசுப்பிரமணியன், ''நான் திருவள்ளூர் மாவட்டத்தில் துணை கலெக்டராக பயிற்சி எடுத்துவருகிறேன். எப்படி என் தந்தையின் டிராக்டர்களைப் பிடிக்கலாம்? உடனே அவைகளை விடுவிக்க வேண்டும்' என்று சத்தம் போட்டிருக்கிறார்.  துணை கலெக்டர் என்பதற்கான விசிட்டிங் கார்டையும் கொடுத்துள்ளார். 

சிவ சுப்ரமணியன்

ஆனாலும், கனிம வளத்துறையினருக்கு அவர் செய்கையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தில் விசாரித்துள்ளனர். இந்தப் பெயரில் துணை கலெக்டரே தங்கள் மாவட்டத்தில் இல்லை என்று கூறியுள்ளனர். அதற்குப்பின் கனிமவளத்துறையினர், விருதுநகர் சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, சிவசுப்மணியனை போலீஸார்  கைதுசெய்தனர். இவர், பி.இ படித்துள்ளார். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!