வங்கி நகை மதிப்பீட்டாளரின் தில்லாலங்கடி வேலை! அதிர்ந்துபோன வாடிக்கையாளர்கள்

கனரா வங்கியில் 98லட்சம் மோசடி.! – நகை மதிப்பீட்டாளர் உட்பட இருவர் கைது.!

தேனி மாவட்டம், மதுரை ரோடு கனரா வங்கியில் ரூ.98 லட்சம் மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர் உட்பட இருவரை காவல் துறையினர் தேடுவருகின்றனர்.

வங்கி

கடந்த 2005-ம் ஆண்டு முதல் கனரா வங்கியில் நகை மதிப்பீட்டாளராகப் பணியாற்றி வந்தவர் செந்தில். இவர் பொதுமக்கள் அடகு வைத்த நகைகளின் கடன் தொகையை மாற்றி, போலி நகைகளை, போலி நபர்களை வைத்து போலியாக அடகு வைத்து 98,12,000 ரூபாய் மோசடி செய்துள்ளார். இதை அறிந்த வங்கி மேலாளர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் செய்தார். அதன் அடிப்படையில் விசாரணையில் இறங்கிய மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார், நகை மதிப்பீட்டாளர் செந்தில் மற்றும் அவருக்கு உடந்தையாகச் செயல்பட்ட வினோத் ஆகிய இருவரையும் தேடு வருகின்றனர்.

மோசடி செய்யப்பட்ட தொகை தற்காலிகமானதுதான் என்றும், இந்தத் தொகை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், சில கோடிகளைத் தொடும் என்றும் வங்கி அதிகாரிகள் மட்டத்தில் பேசப்படுகிறது. தங்களது நகை பறிபோய் உள்ளதா என்ற அதிர்ச்சியில் பொதுமக்கள் வங்கிக்குப் படையெடுத்துவருகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!