'இது தமிழ்நாட்டுக்கே அவமானம்' - முதல்வரை வசைபாடிய கனிமொழி

ஆட்சி கவிழ்ந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் எடப்பாடி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும், மக்கள் பிரச்னைக்காக தமிழகத்தில் ஒலிக்கும் ஒரே குரல் ஸ்டாலின் குரல் எனவும் கனிமொழி தெரிவித்தார்.

ட்சி கவிழ்ந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் எடப்பாடி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும், மக்கள் பிரச்னைக்காக தமிழகத்தில் ஒலிக்கும் ஒரே குரல் ஸ்டாலின் குரல் எனவும் கனிமொழி தெரிவித்தார்.

கனிமொழி

தி.மு.க மகளிரணிச் செயலாளர் கனிமொழி கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாகப் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசிவருகிறார். நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் மேம்பாட்டு நிதி திட்டத்தின்கீழ் 20 லட்சம் ரூபாய் செலவில் கன்னியாகுமரி விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தைக் கனிமொழி எம்.பி இன்று திறந்து வைத்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஒரு முதல்வர் பிரதமரை சந்திக்க நேரம் வாங்க முடியாமல் இருக்கும் அவல நிலை உள்ளது. பிரதமரும் ஒரு முதல்வரை மதித்து நேரம் ஒதுக்காதது தமிழ்நாட்டுக்கே அவமானம். தமிழ்நாட்டின் எந்த ஒரு பிரச்னைக்கும் எடப்பாடி அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. எந்த வகையிலும் ஆட்சி கலைந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள்.

தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று மாணவர்களும் மக்களும் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். இதற்குச் சரியான பதிலை அரசாங்கம் இன்னும் கூறவில்லை. மதுக்கடைகளால் தமிழகத்தில் பிரச்னைகள் அதிகரித்துக்கொண்டே போகிறது. மக்கள் உரிமைகளுக்காகத் தமிழகத்தில் அழுத்தமாக ஒலித்துக்கொண்டிருக்கும் ஒரே குரல் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் குரல்தான். நான் உங்களுக்கு உறுதுணையாக இருக்கிறேன். நாம் பிரதமரை சந்தித்து நமது உரிமைகளைக் கேட்போம் என ஸ்டாலின் கூறுகிறார். இதைவிட எப்படி அழுத்தம்கொடுக்க முடியும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!