18 பிளாட்டுகளுடன் ரூ.10 கோடிக்கு சொத்து சேர்த்த கில்லாடி பியூன்! | peon who bought 18 plots, 50 acres farm land arrested in andhra

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (02/05/2018)

கடைசி தொடர்பு:19:20 (02/05/2018)

18 பிளாட்டுகளுடன் ரூ.10 கோடிக்கு சொத்து சேர்த்த கில்லாடி பியூன்!

போக்குவரத்து துறை பியூன் ஒருவர் 10 கோடிக்கு சொத்து சேர்த்துள்ளார்.

18 பிளாட்டுகளுடன் ரூ.10 கோடிக்கு சொத்து சேர்த்த கில்லாடி பியூன்!

ந்திராவில் பியூன் ஒருவர் 18 பிளாட்டுகள், 50 ஏக்கர் விவசாய நிலம் வாங்கி குவித்துள்ளார். இவற்றின் மொத்த மதிப்பு  ரூ.10 கோடி ஆகும். 

சொத்து குவித்த பியூன்

நெல்லூர் போக்குவரத்து துணை ஆய்வாளர் அலுவலகத்தில் பியூனாகப் பணி புரிந்து வருபவர் நரசிம்ம ரெட்டி (வயது 55). மாதம் 40,000 ரூபாய் சம்பளம் பெறும் இவர், சமீபத்தில் 18 வது பிளாட் வாங்கினார். விஜயவாடாவிலிருந்து தங்கம், வெள்ளி நகைகள் 7 கிலோவுக்கு வாங்கியுள்ளார். நரசிம்ம ரெட்டியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீஸார் அவரின் வீட்டை சோதனையிட்டனர். அப்போது, போலீஸ் அதிகாரிகளே அதிர்ச்சியடைந்துவிட்டனர். நரசிம்ம ரெட்டியின் வீட்டிலிருந்து 18 பிளாட்டுகள் வாங்கியதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. நரசிம்ம ரெட்டி, அவரின் மனைவி மற்றும் உறவினர்கள் பெயரில் இந்த பிளாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
50 ஏக்கர் விவசாய நிலமும் வாங்கியுள்ளார். இந்தப் பத்திரத்தையும் போலீஸார் கைப்பற்றினர். 2 கிலோ அளவுக்கு தங்கம், ரொக்கம் ரூ.7.70 லட்சம். வங்கியில் ரூ.20 லட்சம் டெபாசிட் செய்துள்ளார். எல்.ஐ.சி-யில் ஒரு கோடி டெபாசிட் செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

சொத்து குவித்த பியூன்

கடந்த 1984-ம் ஆண்டு ஆந்திர போக்குவரத்துத்துறையில் பியூனாக வேலைக்குச் சேர்ந்தார். அப்போது, அவருக்கு சம்பளம் ரூ.650, கடந்த 34 ஆண்டுகளாக இதே அலுவலகத்தில் பணி புரிந்து வந்துள்ளார். நரசிம்ம ரெட்டி இல்லாமல் இந்த அலுவலகத்தில் எந்தப் பைலும் நகர்வதில்லை. பதவி உயர்வு தரப்பட்ட போதும்கூட ஏற்றுக்கொள்ள மறுத்து இதே அலுவலகத்தில் 34 ஆண்டுகளாகப் பணி புரிந்துள்ளார்.  1992-ம் ஆண்டு நெல்லூரில் உள்ள முதல் பிளாட்டை வாங்கியுள்ளார். 3,300 சதுர அடி கொண்ட இரு மாடிகள் கொண்ட வீட்டில் அவர் வசித்து வந்துள்ளார். போலீஸார் அவரை கைது விசாரணை நடத்தி வருகின்றனர். சாதாரண பியூனாகப் பணி புரிந்தவரிடம் இவ்வளவு சொத்துகளா என்று போலீஸாரே அதிர்ச்சியடைந்துள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க