வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (02/05/2018)

கடைசி தொடர்பு:21:02 (02/05/2018)

அடுத்தடுத்து 2 கைதிகள் பலி... அதிர்ச்சியைக் கிளப்பும் கோவை மத்திய சிறை!

கோவை மத்திய சிறையில் அடுத்தடுத்து இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மத்திய சிறையில் அடுத்தடுத்து இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மத்திய சிறை

கஞ்சா வழக்கு ஒன்றில் கைதான சொக்கநாதன் என்பவர், கடந்த 16-ம் தேதி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவருக்குத் திடீரென்று, நேற்று மதியம் வலிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி சொக்கநாதன் உயிரிழந்தார்.

இந்நிலையில், பாலியல் வழக்கு ஒன்றில் கைதாகி, கோவை மத்திய சிறையில் இருந்த மற்றொரு கைதியின் பெயர் சீனிவாசன். இதனிடையே, இன்று அதிகாலை திடீரென, சிறையில் இருந்த மின்விசிறியில் சீனிவாசன் தூக்கு மாட்டிக் கொண்டார். இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக, கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, விசாரணை நடந்து வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கோவை மத்திய சிறையைப் பொறுத்தவரை, அங்கு போதிய அளவில் மருத்துவ வசதிகள் இல்லை எனத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டுவருகிறது. கடந்த மார்ச் மாதம் முதல், தற்போதுவரை 3 கைதிகள் உயிரிழந்துள்ளனர். அதில், இருவர் உடல்நிலை சரியில்லாமல்தான் உயிரிழந்திருக்கிறார்கள். கோவை மத்திய சிறையில் அடுத்தடுத்து இரண்டு கைதிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, கோவை மத்திய சிறையில் மருத்துவ வசதிகளை முறையாகக் கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.