'என்னை எப்படி சஸ்பெண்ட் செய்யலாம்'- எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பு தீக்குளித்த துப்புரவுப் பணியாளர்

நகராட்சி ஆணையர், ஒருதலைபட்சமாகச் செயல்படுகிறார் என்று கூறி துப்புரவுப் பணியாளர் ஒருவர் எம்.எல்.ஏ., அலுவலகம் முன்பு தீக்குளித்த சம்பவம் ராணிப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நகராட்சி ஆணையர், ஒருதலைபட்சமாகச் செயல்படுகிறார் என்று கூறி துப்புரவுப் பணியாளர் ஒருவர் எம்.எல்.ஏ., அலுவலகம் முன்பு தீக்குளித்த சம்பவம் ராணிப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீக்குளித்த ஆனந்தன்

வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை நகராட்சியில் துப்புரவுப் பணியாளராக வேலைபார்த்து வருபவர் ஆனந்தன் (52). இவர் கடந்த இரண்டு மாதங்களாகச் சரியாகப் பணிக்கு வருவதில்லை என்று கூறப்படுகிறது. அப்படி வேலைக்கு வந்தாலும் குடித்துவிட்டுதான் வந்ததாகத் தெரிகிறது. குடித்துவிட்டு வந்து, வேலை சரியாகப் பார்ப்பதில்லை. வேலை செய்யச் செல்லும் இடங்களில் போதையில் படுத்துவிடுகிறார், அவருடன் வேலை செய்யும் ஆட்களிடம் சண்டை போடுகிறார். என்ற குற்றச்சாட்டு அவர் மீது தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது. இதனால், இவரை நகராட்சி ஆணையர் (பொறுப்பு ) வெங்கடாசலம், பணியிடை நீக்கம் செய்துள்ளார். இதனை ஏற்றுக்கொள்ளாத ஆனந்தன், 'எப்படி நீங்கள் என்னை சஸ்பெண்ட் செய்யலாம். நான் உங்களைச் சும்மா விடமாட்டேன். நீங்கள் ஒருதலைபட்சபமாகச் செயல்படுகிறீர்கள். மற்ற ஊழியர்களும் குடிக்கின்றனர். அவர்களை எதுவும் கேட்காமல், என் மீது மட்டும்  நடவடிக்கை எடுத்துள்ளீர்கள். என்னை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும்' எனக் கூறி ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் ஆனந்தன் உடலில் 60 சதவிகிதம் தீக்காயம் ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!