'சுற்றுலாப் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பு' - திற்பரப்பு அருவி அலுவலகத்துக்கு சீல்!

சுற்றுலாப் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த திற்பரப்பு அருவி நுழைவுக்கட்டண அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

திற்பரப்பு அருவி

சுற்றுலாப் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த திற்பரப்பு அருவி நுழைவுக்கட்டண அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

குமரி குற்றாலம் என அழைக்கப்படுவது திற்பரப்பு அருவி. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் ரூ.5 நுழைவுக்கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும் என திற்பரப்பு பஞ்சாயத்து அறிவித்துள்ளது. நுழைவுக்கட்டணம் வசூலிக்கும் உரிமையை ஆண்டுதோறும் குத்தகைக்கு விடுவது வழக்கம். கடந்த ஆண்டு குத்தகையை கிறிடோபர் தாஸ் என்பவர் எடுத்திருந்தார். அந்த குத்தகை கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்தது. மேலும் 10 சதவிகிதம் தொகையுடன் இந்த ஆண்டுக்கான குத்தகை தொகை ரூ.45 லட்சத்தை ஏப்ரல் மாதம் 1-ம் தேதிக்குள் செலுத்தியிருக்க வேண்டும். பணம் செலுத்தாததைத் தொடர்ந்து திற்பரப்பு பஞ்சாயத்து செயல் அலுவலர் ரமாதேவி தலைமையில் அதிகாரிகள் அருவிக்குச் சென்றனர். அப்போது அருவிக்கான நுழைவுக்கட்டணமாக ரூ.10 வாங்கப்படுவதாக சுற்றுலாப் பயணிகள் புகார் தெரிவித்தனர். மேலும் ரசீதில் வரிசை எண், அலுவலக சீல் உள்ளிட்டவை இல்லை.

நுழைவு கட்டணம் வசூலிக்கும் மையத்தை அதிகாரிகள்  சீல் வைத்தனர்

இதையடுத்து அருவிக்கான நுழைவு கட்டணம் வசூலிக்கும் மையத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். அந்த குத்தகைதாரரின் வசூல் உரிமம் ரத்து செய்யப்பட்டது. அடுத்த குத்தகை விடும்வரை திற்பரப்பு பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் நேரடியாக நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படும் என செயல் அலுவலர் அறிவித்தார். நாளை முதல் பஞ்சாயத்து நிர்வாகம் நுழைவுக்கட்டண வசூலில் ஈடுபட உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!