'எங்களின் கண்கள், காதுகளாய் இருப்பது நீங்களே' - மீனவர்களுக்கு அட்வைஸ் கொடுக்கும் ஏ.டி.ஜி.பி

கடலோரக் காவல்படையின் கண்களாகவும், காதுகளாகவும் இருப்பவர்கள் மீனவர்களே என, கடலோரக் காவல்படை ஏ.டி.ஜி.பி வி.எஸ்.ஆர் மூர்த்தி  தெரிவித்துள்ளார். 

கடலோரக் காவல்படையின் கண்களாகவும், காதுகளாகவும் இருப்பவர்கள் மீனவர்களே என, கடலோர காவல்படை ஏ.டி.ஜி.பி வி.எஸ்.ஆர் மூர்த்தி  தெரிவித்துள்ளார். 

ஏ டி ஜி பி மூர்த்தி  

தூத்துக்குடியில் கடலோரக் காவல்படையினருக்கான குடியிருப்புகளைத் திறந்து வைத்த கடலோரக் காவல்படை ஏ.டி.ஜி.பி., வி.எஸ்.ஆர்.மூர்த்தி, பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''கடேலோரக் காவல் படையினருக்கான  குடியிருப்புகள், ரூ.11.9 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுத் திறக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு அடுக்குமாடியில், 32 வீடுகள் உள்ளன. இந்தியாவில் கடலோர மாநிலங்களில் உள்ள, 42 கடல் நிலையங்கள் ( costal stations) வரும் 2020க்குள், அனைவரும் தங்கும் வகையில் குடியிருப்புகள் கட்டும் பணிகள் முடிவடைந்து விடும். இதற்காக, கடலோர மாநிலங்களில், 400 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, மத்திய ராணுவ அமைச்சகத்தின் அனுமதியும் பெறப்பட்டுள்ளது.

கடலோரக் காவல் துறையை பொறுத்த அளவில், ஒகி புயலுக்குப் பின், 15 ஆண்டுகளுக்கான கட்டாய செயல்முறைத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதில் முதல், 5 ஆண்டுகளில், அனைத்து கடலோர நிலையங்களையும் மேம்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ரூ.36 ஆயிரம் கோடி செலவில், பெரிய கப்பல் தளங்கள், தீ தடுப்பான்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விமானத் தளங்கள் போன்றவை அமைக்கப்பட உள்ளன.

இந்தியாவில் 26 நவம்பர் (26/11) மும்பை குண்டுவெடிப்புக்குப் பின் கடலோர காவல்படையின் முக்கியத்துவமும் செயல்பாடும் அதிகரித்துள்ளது. கடலோர காவல் படையினர் தனித்து செயல்படாமல், 16 ஏஜென்சிகளுடன் இணைந்து செயல்படுகின்றனர். கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஒத்துழைப்பு இருந்தால் ஆபத்துக்காலங்களில் விரைந்து செயல்பட்டு பெரும் சேதத்தினை தவிர்க்க முடியும். ஒகி புயலின் போது தமிழக, கேரள அரசின் ஒத்துழைப்பின்  காரணமாக துரிதமாகச் செயல்பட்டு, பாராட்டுகளையும் பெற முடிந்தது.

கடலோர காவல்படையினரை பொறுத்த வரையில் அவர்களுடைய கண்களாகவும், காதுகளாகவும் மீனவர்கள்தான் இருக்கிறார்கள். நாங்கள் கேட்டுக்கொள்வதெல்லாம், மீனவர்கள் கடலுக்குள் செல்லும் போது  DATS கருவியைக் கொண்டு செல்லவேண்டும். அப்போதுதான் அவர்களின் இருப்பிடத்தை மீட்பு குழுவினர் எளிதில் கண்டுபிடிக்க முடியும். மீனவர்கள் குறைந்த பட்சம் லைப் ஜாக்கெட் வைத்து கொண்டு கடலுக்குள் செல்ல வேண்டும். ஆழ்கடல் மீன் பிடிப்பிற்குச் செல்லும் போது குழுவாக செல்ல வேண்டும். இவற்றைப் பின்பற்றுவதால் ஆபத்துக் காலங்களில், மீட்பு படையினர் மீனவர்களை விரைவாக மீட்க உதவியாக இருக்கும்.” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!