வெளியிடப்பட்ட நேரம்: 04:01 (03/05/2018)

கடைசி தொடர்பு:07:55 (03/05/2018)

பி.எஃப் உடன் இணைக்கப்பட்ட ஆதார் தகவல்கள் திருட்டா? - ஆணையர் கடிதத்தால் எழும் சர்ச்சை

பி.எஃப் உடன் இணைக்கப்பட்ட ஆதார் தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டுவிட்டதாக வருங்கால வைப்பு நிதி ஆணையர் கடிதம் எழுதியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பி.எஃப் உடன் இணைக்கப்பட்ட ஆதார் தகவல்கள், ஹேக்கர்களால் திருடப்பட்டுவிட்டதாக வருங்கால வைப்பு நிதி ஆணையர் கடிதம் எழுதியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆதார் அட்டை அமல்படுத்தப்பட்ட பின்னர், வாக்களர் அடையாள அட்டை முதல் சகல அடையாள அட்டைகளும் அதனுடன் இணைக்கப்பட்டன. நாட்டில், கோடிக்கணக்கான பணியாளர்கள் பி.எஃப் என்கிற வருங்கால வைப்பு நிதி கணக்குதாரர்களாக இருக்கின்றனர். அவர்களது தகவல்கள் அனைத்தும் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன.

ஆதார்

இந்நிலையில், மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையர் வி.பி.ஜாய், மத்திய தொழில்நுட்பத் துறைக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில்,  ''ஆதாருடன் இணைக்கப்பட்டிருந்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்குதாரர்களின் தகவல்களை ஹேக்கர்கள் திருடிவிட்டனர். இதனால்,  aadhaar.epfoservices.com என்ற இணையதளத்தில் கணக்குதாரர்களின் தகவல்களை இணைக்கும் பணியைத் தற்காலிகமாக நிறுத்தி, இணையதளச் செயல்பாடுகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன’’ என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

நாட்டின் அனைத்துப் பணியாளரின் ஊதியத்தில் 12 சதவிகிதம் பி.எஃப் தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. எனவே, சம்பளம் தொடர்பான தகவல்கள், வங்கிக் கணக்குகுறித்த தகவல்கள் ஆகியவையும் திருடப்பட்டிருக்கலாம் என சைபர் கிரைம் துறை வல்லுநர்கள் கூறியுள்ளனர். ஆனால், வருங்கால வைப்பு நிதித்துறை இதை மறுத்துள்ளது. இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட திருட்டு எதுவும் நடக்கவில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக சர்வர் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளது. ஆதார் தகவல்கள் திருடப்பட்டதாகக் கூறப்படுவதை 'தேசிய தனிநபர் அடையாள ஆணையம் ( UIDAI)’ மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க