வெளியிடப்பட்ட நேரம்: 04:30 (03/05/2018)

கடைசி தொடர்பு:07:13 (03/05/2018)

பள்ளிச் சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு - வாலிபர் சிறையில் அடைப்பு!

 மண்டபம் முகாமில் உள்ள இலங்கை அகதி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போஸ்கோ சட்டத்தின் படி ராமேஸ்வரம் மகளிர் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

மண்டபம் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள சிறுமிக்கு பாலியல் தொந்தரவுகொடுத்த வாலிபரை போஸ்கோ சட்டத்தின்படி ராமேஸ்வரம் மகளிர் காவல் நிலைய போலீஸார் கைதுசெய்தனர்.

இலங்கைத் தமிழர்கள் அகதிகளாகத் தங்கியிருக்கும் முகாம், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ளது. இந்த முகாமில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றும் உள்ளது. இப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்துவரும் சிறுமி ஒருவர், பள்ளி விடுமுறை என்பதால் தனது வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த மண்டபம் சமத்துவபுரத்தைச் சேர்ந்த முத்தையா என்பவரது மகன் சரவணன் (35), சிறுமிக்கு பாலியல் தொந்தரவுகொடுத்துள்ளார். 

 சிறுமி, தன் பெற்றோரிடம் இதுகுறித்து கூறியுள்ளார். அவர்கள், இச்சம்பவம்குறித்து ராமேஸ்வரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார், சிறுமிக்குப் பாலியல் தொந்தரவுகொடுத்த சரவணனை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.