தேனியில் களைகட்டிய பாகுபலி மணல் சிற்பக் கண்காட்சி!

பாகுபலி படம் திரைக்கு வந்து ஒரு வருடம் முடிய போகிறது, ஆனால் பாகுபலி ஃபீவர் மட்டும் இன்னும் குறையவில்லை

பாகுபலி மணல் சிற்பக் கண்காட்சி

'பாகுபலி' படம் திரைக்கு வந்து ஒரு வருடம் முடிந்துவிட்டது. ஆனால், பாகுபலி ஃபீவர் மட்டும் இன்னும் குறையவில்லை. தேனியில் தற்போது புதிதாக பாகுபலி மணல் சிற்பக் கண்காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. புதிதாக இருக்கிறதே என ஒரு விசிட் அடித்தோம். பாகுபலி, பல்வாள்தேவன், கட்டப்பா, தேவசேனா மற்றும் சிவகாமி தேவி ஆகியோரது சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. மணற்சிற்பக் கண்காட்சியுடன் இணைந்து பொருள்காட்சியும் அமைக்கப்பட்டிருக்கிறது.

குழைந்தைகள் விளையாடுவதற்காகத் தனி இடமும் அமைக்கப்பட்டிருக்கிறது. "தினமும் மாலை 4 மணி முதல் 9.30 மணி வரையும், வார விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் நடைபெறுகிறது. ஏப்ரல் 26-ம் தேதி தொடங்கிய கண்காட்சி, மே 6-ம் தேதி வரை நடைபெறுகிறது" என நிர்வாகத் தரப்பினர் தெரிவித்தனர். புதிய முயற்சியாக இது தொடங்கப்பட்டுள்ளதால், பொதுமக்களும் கண்காட்சி மற்றும் பொருள்காட்சியைக் காண ஆர்வம் காட்டுகின்றனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!