வெளியிடப்பட்ட நேரம்: 14:45 (03/05/2018)

கடைசி தொடர்பு:14:45 (03/05/2018)

77 பேரின் உயிரைப் பறித்த புழுதிப் புயல்! ராஜஸ்தான், உத்தரப்பிரதேசத்தில் நடந்த சோகம்

புழுதிப் புயலில் சிக்கி 77 பேர் உயிரிழந்தனர்.

77 பேரின் உயிரைப் பறித்த புழுதிப் புயல்! ராஜஸ்தான், உத்தரப்பிரதேசத்தில் நடந்த சோகம்

ராஜஸ்தான், உத்தரப்பிரதேசத்தில் ஏற்பட்ட புழுதிப் புயலில் சிக்கி 77 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் 45 பேரும் ராஜஸ்தானில் 32 பேரும் புழுதிப் புயலுக்கு உயிரிழந்தனர். ஆக்ரா நகரில் மட்டும் அதிகபட்சமாக 36 பேர் பலியாகியுள்ளனர். 

புழுதி புயல்

ராஜஸ்தானில் டோல்பூர், பரத்பூர், ஆழ்வார் மாவட்டங்களிலும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மேட்ரேட்சியா, கெரா மாவட்டங்களில் நேற்று இரவு புழுதிப் புயல் தாக்கியதில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. புகுதிப் புயலுடன் பலத்த மழையும் பெய்தது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 100-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் காயமடைந்தவர்களுகு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டெல்லியிலும் நேற்று இரவு 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. பலத்த மழையும் பெய்தது. இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா 4 லட்சம் நிவாரணமாக ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது. 

உத்தரப்பிரதேசத்திலும் மீட்புப் பணிகளை முதல்வர் ஆதித்யநாத் முடுக்கிவிட்டுள்ளார். பிரதமர் மோடி பலியானவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் மோடி தன் ட்விட்டர் செய்தியில் கூறியுள்ளார். பேரிடர் மேலாண்மைக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க