வெளியிடப்பட்ட நேரம்: 16:37 (03/05/2018)

கடைசி தொடர்பு:16:37 (03/05/2018)

இரண்டு துண்டான மாட்டுவண்டிகள்... தூக்கி வீசப்பட்ட வீரர்கள்...ரேக்ளா போட்டியில் நடந்த அதிர்ச்சி

தூத்துக்குடியில் கோயில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டுவண்டி எல்லைப் பந்தயத்தில், மாட்டுவண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

தூத்துக்குடியில் கோயில் கொடை விழாவை  முன்னிட்டு நடைபெற்ற மாட்டுவண்டி எல்லைப் பந்தயத்தில், மாட்டுவண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். 

bulleck cart race

தூத்துக்குடி மாவட்டம், செக்காரக்குடி அருகில் உள்ள கொம்புகாரநத்தம் கிராமத்தில் துர்க்கை அம்மன் கோயில், கொடை விழா  நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு, தென் மாவட்டங்களின் வழக்கப்படி,  மாட்டு வண்டி எல்கைப்பந்தயம்  நடைபெற்றது. இதில்,  சிறிய மாட்டு வண்டி மற்றும் பூஞ்சிட்டு மாட்டுவண்டி  என இரண்டு பிரிவுகளில் பந்தயம் நடைபெற்றது.

 

bulleck race accident

கொம்புக்கார நத்தம் முதல் பொட்டலூரணி விலக்கு வரை போட்டிக்கான எல்லை அறிவிக்கப்பட்டிருந்தது.  சிறிய மாட்டுவண்டிப் பந்தயம் 6 மைல் தூரத்துக்கும் பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயம் 3 மைல் தூரத்துக்கும்  நடைபெற்றது.  சிறிய மாட்டு வண்டி பிரிவில், 25 வண்டிகளும், பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயத்தில் 30 வண்டிகளும் கலந்து கொண்டன. முதலில், சிறிய மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. 

bulleck race accident

தொடர்ந்து, பூஞ்சிட்டு மாட்டுவண்டிப் போட்டியை பச்சைக்கொடி அசைக்கப்பட்டு தொடங்கப்பட்டதும், முன்  வரிசையில் கிளம்ப வேண்டிய, பூஞ்சிட்டு மாட்டு வண்டிகள் சற்று தாமதமானதால், பின் தொடர்ந்து வந்த மற்ற பூஞ்சிட்டு மாட்டு வண்டிகள் இதனை முந்திச் செல்ல முயன்றது. குறுகிய சாலையாக இருந்ததால் மாட்டுவண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் மாட்டுவண்டி ஓட்டிச் சென்ற  6 பேர் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இரண்டு மாட்டுவண்டிகள் உடைந்து சேதமடைந்தன. மாட்டுவண்டிகளில் பூட்டப்பட்டிருந்த மாடுகள் அத்துமீறி,  பந்தயத்தை வேடிக்கை பார்க்க கூட்டத்தை நோக்கி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே, 108  ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, காயமடைந்தவர்களுக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டது. நெல்லை, விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி மற்றும் திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இருந்து போட்டியில் கலந்து கொண்டவர்களில், சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில், தூத்துக்குடி மாவட்டம் வடக்கு காரச்சேரியை சேர்ந்த கனகராஜ் என்பவரது மாட்டுவண்டி முதல் பரிசையும், பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயத்தில் நெல்லை மாவட்டம் தென்காசியைச் சேர்ந்த பிரபு என்பவரது மாட்டுவண்டி முதலிடத்தையும் பெற்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க