வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (03/05/2018)

கடைசி தொடர்பு:18:20 (03/05/2018)

`தி.மு.க-வுடன் இருந்துகொண்டு இது பற்றி பேசவே கூடாது' - வைகோவை சாடிய கடம்பூர் ராஜு

தி.மு.க உடன் இருந்து கொண்டு காவிரி மேலாண்மை வாரியம் பற்றி பேசிட வைகோவிற்கு எவ்விதமான அருகதையும் இல்லை. கடந்த 1974ல் காவிரி தொடர்பான ஒப்பந்ததை யார் புதுப்பிக்கவில்லை என்பதனை வைகோ கூற வேண்டும். காவிரி மேலாண்மை விவகாரத்தில் நீதி மன்றம்தான் இறுதி முடிவு செய்ய வேண்டும்.

தி.மு.க-வுடன்  இருந்துகொண்டு காவிரி மேலாண்மை வாரியம் பற்றி பேசிட வைகோவுக்கு எவ்விதமான அருகதையும் இல்லை. கடந்த 1974-ல் காவிரி தொடர்பான ஒப்பந்தத்தை யார் புதுப்பிக்கவில்லை என்பதை வைகோ கூற வேண்டும். காவிரி மேலாண்மை விவகாரத்தில் நீதிமன்றம்தான் இறுதி முடிவு செய்ய வேண்டும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் 2 வது குடிநீர் திட்டம் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வரும் 11-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இந்நிகழ்ச்சிக்கான கால்கோல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி, மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் மற்றும் மாவட்ட எஸ்.பி மகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, ``தமிழகத்தை மது இல்லாத மாநிலமாக மாற்றிட படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரூ.28 கோடி ஒதுக்கி மதுவின் தீமைகள் குறித்து அரசு விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வருகிறது. நெல்லையில் மாணவர் தினேஷ், தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் குடிப்பழக்கம் கொண்டவர்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தும். மாணவனின் இழப்புக்கு அரசு ஏதவாது உதவி செய்யும். மாணவர்கள் இதுபோன்ற தற்கொலை சம்பவங்களில் ஒருபோதும் ஈடுபடக் கூடாது.

கெய்ல் திட்டம் குறித்து நான் தெரிவித்த கருத்தை வைகோ தவறாகப் புரிந்துகொண்டார். அத்திட்டம் வந்தபோது வைகோ, தி.மு.க மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்ததாகத் தெரிவித்தேன். தி.மு.க உடன் இருந்துகொண்டு காவிரி மேலாண்மை வாரியம் பற்றி பேசிட, வைகோவுக்கு எவ்வித அருகதையும் இல்லை. கடந்த 1974-ல் காவிரி தொடர்பான ஒப்பந்தத்தை யார் புதுப்பிக்கவில்லை என்பதை வைகோ கூற வேண்டும். எங்களுக்கும் வரலாறு தெரியும். இப்படிப்பட்ட வரலாறுகளை அவர்தான் மறைக்கிறார். தான் மாறும் கூட்டணிக்கு ஏற்ப மாற்றி மாற்றி பேசி வருகிறார் வைகோ.

காவிரி மேலாண்மை விவகாரம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. நீதி மன்றம்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும். நீதிமன்ற நடவடிக்கை பற்றி கருத்து கூற முடியாது. கல்லூரி விழாக்களில் அரசியல் பேசக் கூடாது என்பது நல்ல முடிவு. அரசின் கருத்தைக் கேட்டுதான் நீதிமன்றம் கூறியுள்ளது. மாணவர்களிடையே எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தக் கூடாது என்பது நல்ல முடிவு” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க