நடப்பு ஐ.பி.எல் சீஸன்தான் தோனியின் பெஸ்ட்... சொல்லுது புள்ளி விவரம்

நடப்பு ஐ.பி.எல். சீசன்தான் தோனியின் பெஸ்ட் சீசன்

நடப்பு ஐ.பி.எல் சீஸன்தான் தோனியின் பெஸ்ட்... சொல்லுது புள்ளி விவரம்

ஐ.பி.எல் மைதானத்தில் 36 வயதிலும் பந்துகளை சிக்ஸருக்கும் பவுண்டரிக்கும் விளாசிக்கொண்டிருக்கிறார்  தோனி. இதுவரை இல்லாத ஃபார்மில் இருக்கும் கேப்டன் கூல், மேட்ச் ஃபினிஷிங் செய்யும் அழகே அழகு. நடப்பு ஐ.பி.எல் சீஸன்தான் இவருக்கு பெஸ்ட் சீஸன் என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.

சென்னை கேப்டன் தோனி

நடப்பு சீஸனில் இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடியுள்ள தோனி, 286 ரன்களை விளாசியுள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 169.23, இதில், 3 அரை சதங்களும் அடக்கம். 4.57 பந்துகளுக்கு ஒரு பந்தை பவுண்டரிக்கு அனுப்பிவிடுகிறார். இதற்கு முன், தோனி 2013-ம் ஆண்டு ஐ.பி.எல் சீஸனில் 18 போட்டிகளில் 461 ரன்கள் குவித்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 162.89. இந்தத் தொடரில் 4 அரை சதங்களையும் விளாசியிருந்தார். நடப்பு சீஸனில் மஞ்சள் படைத் தலைவர் அபார ஃபார்மில் இருப்பதால், 2013-ம் ஆண்டைக் காட்டிலும் அதிக ரன்கள் குவிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

சென்னை அணிக்காக இதுவரை 370 ரன்கள் குவித்து அம்பத்தி ராயுடு முதலிடத்தில் உள்ளார். தோனிக்கு இரண்டாவது இடம். ஷேன் வாட்ஸன் 281, சுரேஷ் ரெய்னா 205, பிராவோ 118 ரன்கள் எடுத்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். தோனி ஃபார்ம் குறித்து பயிற்சியாளர் ஸ்டீஃபன் ப்ளமிங் வியக்கவில்லை. மாறாக, 'வயதெல்லாம் ஒரு தடையே கிடையாது. தோனியிடமிருந்து இன்னும் நான் அதிகமாக எதிர்பார்க்கிறேன். இளம் வீரர்கள் அணியில் இருந்தாலும், நெருக்கடி சமயத்தில் அனுபவ வீரரின் ஆட்டம்தான் கை கொடுக்கும்'' என்கிறார். இப்போது தோனி மற்றொரு கோரிக்கை விடுத்துள்ளார். அதாவது, மைதானத்துக்கு வெளியே பந்தை அடித்தால் 8 ரன்கள் கொடுக்கணுமாம்!.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!