பர்வதீஸ்வர ஸ்வாமி திருக்கோயில் குடமுழுக்குத் திருவிழா!

தொண்டை மண்டலத்தின் வட எல்லையில் பெரியபாளையத்துக்கு அருகில் குமாரபுரி என்று வழங்கப்பட்ட ஊர், தற்போது கொசவன்பேட்டை (ஊத்துக்கோட்டை வட்டம்) என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இங்கு அருள்மிகு காமாட்சி அம்மன் உடனுறை பர்வதீஸ்வர ஸ்வாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இது காலப்போக்கில் பழுதடைந்துபோகவே, திருக்கோயில் புனரமைப்புச் செய்யப்பட்டது. ஆரண்ய நதி தீரத்தில் அருள்பாலிக்கும் நித்ய மங்கள நாதரான பர்வதீஸ்வரர் திருக்கோயிலில் நாளை (4.5.2018) பூரண குடமுழுக்கு செய்யப்படவுள்ளது.

குடமுழுக்கு

நூதன சனீஸ்வரர், நவகிரஹ சந்நிதி, பரிவார தேவதைகளின் சந்நிதிகள் என அழகுடன் காட்சியளிக்கும் இந்த ஆலயத்தில் வழிபட்டால், திருக்காளத்தி, திருமயிலைத் தலத்தை ஒன்று சேரத் தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள் பெரியோர்கள். நாளை காலை
5 மணியளவில் தொடங்கும் இந்தக் குடமுழுக்கு விழாவில் விசேஷ பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெற உள்ளன். நாளை இரவு காமாட்சி அம்மன் உடனுறை பர்வதீஸ்வர ஸ்வாமியுடன் பஞ்ச மூர்த்தி உலா நடைபெறவிருக்கிறது. கல்யாண ஷேத்திரம் என்று போற்றப்படும் இந்தக் கோயிலுக்கு முடிந்தவர்கள் சென்று வழிபடலாம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!