ஏடிஎம்-மில் பணம் எடுக்கச் சென்றவருக்கு கையில் வந்த ஸ்கிம்மர் கருவி!

ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்றவருக்கு அந்த மெஷினில் பொறுத்தப்பட்டிருந்த ஸ்கிம்மர் கருவி

ஏடிஎம்-மில் பணம் எடுக்கச் சென்றவருக்கு அந்த மெஷினில் பொறுத்தப்பட்டிருந்த ஸ்கிம்மர் கருவி கழண்டு வந்தது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

கனரா ஏடிஎம்- ஸ்கிம்மர் கருவி

ஏடிஎம் கார்டு விவரங்களைப் போன் மூலம் கேட்டு பண மோசடி சம்பவங்கள் நடப்பது ஒரு பக்கமென்றால், ஏடிஎம் மெஷினில் ஸ்கிம்மர் போன்ற கருவிகளைப் பொறுத்தி ஏடிஎம் கார்டு விவரங்களைத் திருடி அதன் மூலம் பலபேருடைய பணத்தை எங்கிருந்தோ கொள்ளையடிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடந்துகொண்டேதான் உள்ளது. எவ்வளவுதான் விழிப்பாக இருந்தாலும் ஏடிஎம் மோசடிகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதற்கு மதுரையில் நடந்த சம்பவமே உதாரணம்.

அசோக் என்ற இளைஞர் நம்மிடம், ''மதுரை வடக்கு வெளி வீதி கனரா வங்கி ஏ.டி.எம்-மில் நேற்று இரவு பணம் எடுக்கச் சென்றேன். பணம் எடுத்துவிட்டேன், அப்போது கார்டு போடும் இடம் ரொம்ப இறுக்கமாக இருந்தது. இரண்டாவது முறை கார்டு போட்டு இழுக்கும்போது அதிலிருந்து ஒரு தகடு  கழண்டு வந்தது. அதுதான் ஸ்கிம்மர் கருவி என்பதைப் புரிந்துகொண்டேன். உடனே அங்கு குறிப்பிடப்பட்டிருந்த  கஸ்டமர் கேர் எண்ணுக்கு தொடர்புகொண்டு தகவல் கூறினேன். உடனே அவர்கள், அந்த ஸ்கிம்மரை அருகிலுள்ள திலகர் திடல் காவல் நிலையத்தில் கொடுக்கச் சொன்னார்கள். நானும் உடனே போலீஸ் ஸ்டேஷன் சென்று அங்கிருந்த அதிகாரிகளிடம் கொடுத்தேன். அவர்கள் என் தொடர்பு எண், முகவரியை வாங்கிக்கொண்டு விசாரிப்பதாகச் சொன்னார்கள்.

நான் புகார் தரவா என்றதுக்கு, அது வங்கி மேலாளர்தான் தரணும் என்றார்கள். அதோடு இன்று வங்கி மேலாளரிடம் போய் விவரத்தைச் சொன்னேன், நீங்கள் கஸ்டமர் கேருக்கு சொன்னதும் எங்களுக்குத் தகவல் வந்துவிட்டது. அது பற்றி தற்போது விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அந்த ஏடிஎம்மை சோதனை செய்துகொண்டிருக்கிறோம்'' என்றார்கள். வங்கிக் கிளைக்கு அருகில் இருக்கும் ஏடிஎம்-மிலேயே தைரியமாக ஸ்கிம்மரை வைக்கிறார்கள். இனிமேல் ஏடிஎம் செல்பவர்கள் செக் செய்த பின்பு கார்டை சொருகுவது நல்லது'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!