வெளியிடப்பட்ட நேரம்: 18:52 (03/05/2018)

கடைசி தொடர்பு:18:52 (03/05/2018)

''சென்டிமென்ட் இல்லாம யாருமே வாழ முடியாது..!'' - விஜய் ஆண்டனி

இசையமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி, `நான்’ படத்தின் மூலம் நடிகராகவும் வலம் வர ஆரம்பித்தார். `சலீம்’, ’இந்தியா பாகிஸ்தான்’, `பிச்சைக்காரன்’, `சைத்தான்’, `எமன்’, ’அண்ணாதுரை’ என வரிசையாகப் பல படங்களில் நடித்தார். தமிழ் சினிமாவில் நடந்துவந்த ஸ்டிரைக்கின் காரணமாக விஜய் ஆண்டனியின் ’காளி’ படம் வெளியாகாமல் இருந்து வந்தது. தற்போது ஸ்டிரைக் முடிந்து படங்கள் வெளிவர ஆரம்பித்திருக்கும் இந்த நேரத்தில், ’காளி’ படம் வருகிற 18-ம் தேதி ரிலீஸ் என அறிவித்துள்ளனர். ’பிச்சைக்காரன்’, ’அண்ணாதுரை’ பட வரிசையில் ’காளி’யும் அம்மா சென்டிமென்ட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்கிற செய்தி வர, அதை உறுதி செய்ய விஜய் ஆண்டனியிடம் பேசினோம்.

விஜய் ஆண்டனி

’’சென்டிமென்ட் இல்லாம யாருமே வாழ முடியாது. நம்மகிட்ட இருக்கிற ஐபோன், கார் எல்லாம் நம்மைவிட அழகா இருக்கு. நாம படைத்தது எல்லாம் நம்மைவிட அழகா இருந்தாலும், நம்ம துணைக்கு எதிர்பார்க்குறது இன்னொரு மனிதரைத்தான். அந்த மாதிரி அம்மா சென்டிமென்ட், அப்பா சென்டிமென்ட் எல்லாமே இயல்புதான். எல்லா படங்களிலும் ஒரு சென்டிமென்ட் இருக்கும். அம்மா சென்டிமென்ட்ல படம் பண்ணணும்கிற நோக்கத்துல பண்ணலை. கதையில அப்படி இருந்துச்சு. அதுனால `காளி’ படத்தில் அம்மா சென்டிமென்ட் இருக்கு’’ என்றார் விஜய் ஆண்டனி.