ராமேஸ்வரம் சுற்றுலாத் தல இலட்சினை! மத்திய - மாநில அமைச்சர்கள் வெளியிட்டனர்

புனிதத் தலமாகவும், சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வரும் ராமேஸ்வரத்திற்கு எனத் தனி இலட்சினை மற்றும் தனி இணைய தள முகவரியினையும் மத்திய, மாநில அமைச்சர்கள் வெளியிட்டனர்.

புனித தலமாகவும், சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வரும் ராமேஸ்வரத்துக்கு எனத் தனி இலட்சினை மற்றும் தனி இணைய தள முகவரியினையும் மத்திய, மாநில அமைச்சர்கள் வெளியிட்டனர்.

ராமேஸ்வரம் இலட்சினை வெளியிட்ட மத்திய மாநில அமைச்சர்கள்

நாட்டின் தென்கோடி பகுதியில் அமைந்துள்ள புரதான புனிதத் தலமாக விளங்கி வருவது ராமேஸ்வரம். இங்குள்ள ராமநாதசுவாமி திருக்கோயிலில் சேதுபதி மன்னர்களால் கட்டப்பட்டது. கோயிலின் மூன்றாம் பிரகாரம் உலகப் பிரசித்தி பெற்றது. இது தவிர ஆங்கிலேயர் காலத்தில் தலை சிறந்த துறைமுக நகரமாக விளங்கி, ஆழிப்பேரலையினால் அழிந்து போன தனுஷ்கோடி, நாட்டின் நிலப்பரப்புடன் தீவினை இணைப்பதற்காக ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டு நூறு ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாகப் பயன்பட்டு வரும் ரயில் பாலம், தெற்கு ஆசியாவில் முதன் முறையாகக் கடல் மீது கட்டப்பட்ட நீண்ட சாலை பாலம், சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா சென்று திரும்பிய குந்துகால் எனப் பல்வேறு சுற்றுலா இடங்களும் ராமேஸ்வரம் தீவில் அமைந்துள்ளன.

இதன் பெருமையைப் போற்றும் வகையில் மத்திய மாநில அரசுகள் ஆண்டு தோறும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி வருகின்றன. மத்திய அரசின் அம்ரூத் சிட்டி திட்டத்திலும் ராமேஸ்வரம் இடம் பிடித்துள்ளது. இத்தகைய புகழ்வாய்ந்த ராமேஸ்வரத்தினை சுற்றுலாத் தலமாகக் குறிக்கும் வகையில் `இலட்சினை' மற்றும் ராமேஸ்வரம் தீவில் பார்க்க வேண்டிய இடங்கள், தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் உள்ளிட்டவை கொண்ட தனி இணையதளம் (www.explorerameswaram.com) முகவரி ஆகியவற்றை மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் ஆகியோர் வெளியிட்டனர்.  மாவட்ட ஆட்சியர் நடராஜன் இதனைப் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் மத்திய வழிகாட்டு அலுவலர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா ஆகியோர் பங்கேற்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!