குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வருகை!

சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வருகிறார். அவருக்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வருகிறார். அவருக்கு, 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில், இரண்டு நாள்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், இன்று காலை 8.05 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம்மூலம் சென்னைக்கு வருகிறார். காலை 10.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் அவரை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அதிகாரிகள் நேரில் சென்று வரவேற்கிறார்கள். சென்னை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூரிலுள்ள தங்கக்கோயில் செல்கிறார்.

ராம்நாத் கோவிந்த்

 மதியம், வேலூர் சிஎம்சி மருத்துவமனை கல்லூரியில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்கிறார். அங்கிருந்து ஸ்ரீநாராயணி மருத்துவமனை சென்று, சிறுநீரக மாற்று மற்றும் இதய நோய் சிகிச்சைக்கான புதிய பிரிவைத் தொடங்கிவைக்கிறார். மாலை 3.30 மணிக்கு ஸ்ரீபெரும்புதூரிலுள்ள ஓய்வு விடுதிக்குச் செல்கிறார். பின்னர், மாலை 4.55 மணிக்கு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக மாலை 5.50 மணிக்கு சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்று, இரவு அங்கு ஓய்வு எடுக்கிறார்.

5-ம் தேதி காலை 9.30 மணியில் இருந்து 10 மணி வரை பல்வேறு முக்கியப் பிரமுகர்களை ஆளுநர் மாளிகையில் சந்தித்துப் பேசுகிறார். காலை 10 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, சாலை மார்க்கமாக சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 160-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். 

பின்னர், அங்கிருந்து வேளச்சேரியிலுள்ள குருநானக் கல்லூரியில் நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார். நாளை மதியம் விழா முடிந்ததும், மீண்டும் 1 மணிக்கு குருநானக் கல்லூரியில் இருந்து புறப்பட்டு மதியம் 1.05 மணிக்கு சென்னை விமான நிலையம் சென்று அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.

தமிழகத்தில் 2 நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், சென்னை விமான நிலையம் மற்றும் விழா நடைபெறும் இடங்களில் 7 அடுக்கு  போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!