பத்திரிகை சுதந்திர நாளன்று பத்திரிகையாளர்மீது தாக்குதல் - 10 ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் கைது!

உலக பத்திரிக்கை சுதந்திர நாளான நேற்று, கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களால் பத்திரிக்கையாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.

உலக பத்திரிகை சுதந்திர நாளான நேற்று, கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களால் பத்திரிகையாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் மலப்புரத்தில், பத்திரிக்கையாளர் ஒருவர் பத்திரிகையாளர் மன்றத்திலேயே ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களால் தாக்கப்பட்டார். கேரள செய்தித்தாளில் பணிபுரிந்தவர்கள், பவத் மற்றும் அமன். இவர்கள், மலப்புரத்தில் செய்தி சேகரிக்கச் சென்றபோது தான் பவத்தை ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் தாக்கியுள்ளனர். அவரைத் தாக்கிவிட்டு வெளியே வந்த தொண்டர்கள், சாலையில் சென்ற வாகனங்களை நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

குண்ணுமால் பகுதியில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, பேரணியின் இடையே பைக்கில் வந்தவரை ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் தாக்கத்தொடங்கினர். அதைப் பத்திரிகையாளர் பவத் புகைப்படம் எடுத்ததால் அவரைத் தாக்கியுள்ளனர். 

ஆர்.எஸ்.எஸ்

உலக பத்திரிகை சுதந்திர நாளான நேற்று நிருபர் தாக்கப்பட்டது, ஊடகவியலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் நடந்த சில மணி நேரங்களில் பத்திரியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில், தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாக கோஷங்களை எழுப்பினர். இந்தத் தாக்குதலில் தொடர்புடைய பத்து ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுசெய்து, கைதுசெய்யப்பட்டனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!