`ட்விட்டர் பாஸ்வேர்டு கோமாளித்தனம்' - அல்லல்படும் பயனீட்டாளர்..!

ட்விட்டரின் ஹேஷிங் என்ற தொழில்நுட்பத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் ட்விட்டர் அதன் பயனீட்டாளர்களை பாஸ்வேர்டுகளை மாற்ற அறிவுறுத்தியுள்ளது

சமீபகாலமாக, சமூக வலைதளங்கள் தங்களுடைய பயனீட்டாளர்களின் விவரங்களைப் பாதுகாப்பதில் கோட்டைவிட்டுவருகிறது. அந்த வகையில், ட்விட்டர் ஒரு புதிய கோமாளித்தனத்தைச் செய்துள்ளது. இன்று அதிகாலை, ட்விட்டர் தனது அதிகாரபூர்வ பயனீட்டாளர் சேவை மையப் பக்கத்தில், ``ட்விட்டர் பாஸ்வேர்டு பின்னணியில் ப்ராசஸ் செய்யும் மாஸ்க்கிங் வசதியில் சிறு 'பக்' ஒன்று உருவாகியுள்ளது. இதை நாங்கள் சரி செய்துவிட்டோம். எனினும் யார் மூலம் தொழில்நுட்பத்தில் பிரச்னை ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. 

ட்விட்டர்

தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்க்க,  ட்விட்டரில் செலுத்திய பாஸ்வேர்டை மாற்றிக்கொள்ளும்படியும், அதே பாஸ்வேர்டை வேறு ஏதாவது இடத்தில் உபயோகித்திருந்தால் அதை மாற்றும்படி கேட்டுக்கொள்கிறோம்" என ட்வீட் செய்துள்ளது. 

இதுகுறித்து ட்விட்டர் நிறுவனம் தனது பிளாக்கில், ``நாங்கள் பயன்படுத்தும் ஹாஷிங் என்னும் தொழில்நுட்பத்தில் இந்த 'பக்' கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த செயல்பாட்டுக் கோளாரை ட்விட்டரே கண்டுபிடித்துள்ளது. இதனால், பாஸ்வேர்டை மாற்றுவதுடன் லாக் இன் வெரிஃபிகேஷன் ஆப்ஷனையும் பயன்படுத்தும்படி கேட்டுள்ளது."

பல ட்விட்டர் யூஸர்கள், 'தங்களுக்கு பாஸ்வேர்டை மறந்துவிட்டது' என்று கமென்ட் பாக்ஸில்  கூறிவருகின்றனர்.

இருக்கிற பாஸ்வேர்டுகளை ஞாபகம் வைத்துக்கொள்வதே பெரிய வேலையாக உள்ளது. இதில் ஒவ்வொரு சைட்டுக்கும் ஒவ்வொரு பாஸ்வேர்டு வைக்கச்சொல்வது சற்றே பெரிய காரியம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!