வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (04/05/2018)

கடைசி தொடர்பு:09:00 (04/05/2018)

``காவிரி நீருக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்” புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி

``காவிரி நீருக்காகப் பிரார்த்தனை செய்ய வேண்டும்” என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்திருக்கிறார்.

கிரண்பேடி

புதுச்சேரி மாநிலத்தில், கூட்டுறவு சங்கத் தேர்தல் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “30 ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரியில் கூட்டுறவு நிறுவனங்களுக்கான தேர்தல் மூன்று கட்டமாக நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் மே, ஜூன் மற்றும் ஜூலை ஆகிய 3 மாதத்துக்குள் நடத்தி முடிக்கப்படும். முத்ரா திட்டத்தின் கீழ், கூட்டுறவு வங்கிகள்மூலம் விவசாயிகளுக்குபான உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், ”காவிரியில் நீர் திறந்துவிடப்பட்டால், புதுச்சேரி மாநிலத்துக்குத் தேவையான நீர் நிச்சயமாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. காரைக்கால் கடைமடைப் பகுதி என்பதால், நிச்சயமாக காவிரி நீர் கிடைக்கும். காவிரி நீருக்காக அனைவரும் சேர்ந்து பிரார்த்தனை செய்ய வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க