எழுத்தாளர் பிரபஞ்சனுக்குப் பாராட்டு விழா; 10 லட்சம் ரூபாய் பரிசளித்த புதுச்சேரி அரசு

எழுத்தாளர் பிரபஞ்சனுக்குப் பாராட்டுவிழா நடத்திய புதுச்சேரி அரசு, அவருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசளித்து கௌரவப்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மண்ணின் மைந்தரும், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளருமான பிரபஞ்சனின் 57 ஆண்டுக் கால இலக்கியப் பணியைப் பாராட்டி, புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத்துறை, நேற்று மாலை அவருக்கு பாராட்டுவிழா நடத்தியது. சுய்ப்பிரேன் வீதியில் உள்ள கூட்டுறவு ஒன்றிய கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்ற விழாவில், முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு, பிரபஞ்சனின் இலக்கியப் பணியைப் பாராட்டிப் பேசினார். தொடர்ந்து, பிரபஞ்சனின் இலக்கியப் பணிக்காக 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கியும், கிரீடம் அணிவித்தும் கௌரவித்தார் முதல்வர் நாராயணசாமி.  “புதுச்சேரி வரலாற்றை இளைஞர்கள் மறந்துவருகிறார்கள். புதுச்சேரி மாநிலத்திற்கென தனி வரலாறு இல்லை. அதனால், இளைய சமுதாயம் புதுச்சேரி வரலாற்றைத் தெரிந்துகொள்ள, ஆனந்த ரங்கம்பிள்ளை எழுதிய டைரிக் குறிப்புகளை எளிய நடையில் தொகுக்க வேண்டுமென அவரிடம் அன்புடன் கோரிக்கை வைத்தேன். அதை அவர் ஏற்றுக்கொண்டிருக்கிறார். அதேபோல, அடுத்த ஆண்டு புதுச்சேரி அரசு சார்பில் பிரபஞ்சன் பெயரை பத்மஸ்ரீ விருதுக்கு மத்திய அரசுக்கு சிபாரிசு செய்வோம்” என்றார். விழாவில் சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்று, எழுத்தாளர்  பிரபஞ்சனை வாழ்த்திப் பேசினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!