நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற சோமசேகர ரெட்டியுடன் ஒரே மேடையில் பிரதமர் மோடி!

ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான ரெட்டி சகோதரருடன் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார்.

நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க  முயன்ற சோமசேகர ரெட்டியுடன் ஒரே மேடையில் பிரதமர் மோடி!

ர்நாடகத் தேர்தல் பிரசாரத்தின்போது, ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான காளி சோமசேகர ரெட்டி, பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்ட மேடையில் அமர்ந்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரெட்டியுடன் பிரதமர் மோடி

கர்நாடகத் தேர்தலையொட்டி பரப்புரைகள் சூடுபிடித்துள்ளன. பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைக் கைப்பற்றத் துடித்துக்கொண்டிருக்கிறது. பிரதமர் மோடியும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டுள்ளார். பெல்லாரியைச் சேர்ந்த காளி ஜனார்த்தன ரெட்டி, சோமசேகர ரெட்டி ஆகியோர், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கோடீஸ்வரர்கள். பி.எஸ். எடியூரப்பாவின் அரசில், காளி ஜனார்த்தனரெட்டி அமைச்சராகவும் இருந்தார். பெல்லாரி மாவட்டத்தில், பல ஆயிரம் கோடி அளவுக்கு கனிம வளங்களை சுரண்டியாக வழக்குகள் இவர்மீது பதியப்பட்டுள்ளன.

 காளி ஜனார்த்தன ரெட்டி பதவி விலகினார். இந்தச் சமயத்தில், காளி ஜனார்த்தனரெட்டியின் சகோதரர் சோமசேகர ரெட்டி எம்.எல்.ஏ-வாக இருந்தார். சகோதரர் ஜனார்த்தன ரெட்டி மீதான புகாரை விசாரிக்கும் நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக, சோமசேகர ரெட்டி  மீது வழக்கு உள்ளது. இந்த சட்டமன்றத் தேர்தலில், பெல்லாரி தொகுதியில் ஜனார்த்தன ரெட்டியின் இளைய சகோதரர் சோமசேகர ரெட்டிக்கு பாரதிய ஜனதா கட்சி சீட் வழங்கியுள்ளது. 

இந்நிலையில் பிரதமர் மோடி, நேற்று பெல்லாரியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். பெல்லாரி ஸ்டேடியம் மைதானத்தில் நடந்த பரப்புரை கூட்டத்தில், காளி சோமசேகர ரெட்டி பொதுக் கூட்ட மேடையில் பிரதமருடன் கலந்துகொண்டார். பிரசாரத்தில் பேசிய மோடி, ஒரு வார்த்தைகூட லஞ்சம், ஊழல் ஒழிப்புபற்றிப் பேசவில்லை. மாறாக, காங்கிரஸ் கட்சியின் பலவீனங்களை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார். முன்னதாக, கர்நாடக முதல்வர் சித்தராமையா , ''மோடியின் பெல்லாரி வருகைக்கு நன்றி. பரப்புரை கூட்டத்தில் ஜனார்த்தன ரெட்டியின் 35,000 கோடி ஊழல்குறித்து மறக்காமல் பேசவும்'' என்று ட்வீட் செய்திருந்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!