8 வழிச் சாலை அமைத்தால்... மன்சூர் அலிகான் எச்சரிக்கை

மன்சூர் அலிகான்

எட்டு வழிச் சாலை அமைத்தால் சேலத்தில் வாழ முடியாது. இந்தச் சாலையை அமைத்தால் எட்டு பேரை வெட்டுவேன் என்று நடிகர் மன்சூர் அலிகான் எச்சரிக்கை விடுத்தார்.

சினிமா நடிகர் மன்சூர் அலிகான் சேலத்தில் ஏரிகளைப் பராமரித்து வரும் பியூஸ் மானஸை சந்தித்ததோடு அவரோடு இணைந்து குமரகிரி ஏரியில் இறங்கி ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்றி தூய்மைபடித்தினார். பின்னர், சேலம் விமான நிலைய விரிவாக்கத்துக்காக 570 ஏக்கர் நிலம் அரசு கையகப்படுத்துவதால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து, போராட்டத்துக்கு ஆதரவளித்துவிட்டு மாலை 5 மணிக்கு சேலம் மூக்கனேரிக்கு வந்திருந்தார். அப்போது அவரை சந்தித்துப் பேசியபோது, ''மூக்கனேரியில் இருக்கும் தண்ணீர்கூட காவிரியில் இல்லை. ஜத்குரு வாசுதேவ் ஒரு பெரியசாமியார். இயற்கையைக் கொள்ளையடித்து ஆசிரமம் கட்டுவார். அவருடைய பிள்ளைக்கு ஆடம்பரமாகத் திருமணம் செய்துவிட்டு ஊரார் பிள்ளைகளுக்கு மொட்டை அடித்து சீடர் ஆக்குவார். நாம் ஓட்டு போட்டால் 5 வருடத்துக்கு எதையும் கண்டுகொள்ளக் கூடாது. அவர்களே பார்த்துக்கொள்வார்கள் என்று இருக்கிறோம். 500 யானைகள் இறந்துவிட்டன. அதைத் தட்டிக் கேட்பதற்கு நமக்கு சுரணை இல்லை.

இங்கு இருக்கும் மக்கள் யாரும் 8 வழி பசுமை சாலைக்கு ஒத்துழைப்பு கொடுக்கக் கூடாது. 4 வழிச் சாலைக்கு சுங்கச் சாவடி அமைத்து கொள்ளையடிப்பதை 8 வழிச் சாலை அமைத்து பெரிய அளவில் கொள்ளை அடிப்பார்கள். நாம் தமிழர் கட்சியும் ஒத்த கருத்துடைய கட்சிகளும் ஒன்று சேர்ந்து சுங்கச் சாவடிகளை அடித்து நொறுக்குவோம். ஆளுநர் மாளிகையில் 6,500 மான்கள் இருக்கும். அதை அடித்து தூக்கிக்கிட்டுப் போறார்கள்.

முதல்வர் டெல்லி போயிருக்கிறார். காவிரி தண்ணீர் விடுன்னா கேட்கப்போகிறார். லஞ்ச பணத்தைக் கண்டுக்கொள்ளாதே, உறவினரை விடுதலை செய் என்று சொல்லிட்டு வருவார். சேலத்தில் 8 வழிச் சாலை அமைத்தால் 8 பேரை வெட்டுவேன். 8 வழி சாலை அமைத்தால் சேலத்தில் வாழ முடியாது. நான் ஒரு கலைக்கூத்தாடி. ஊடகம் வலுவான ஆயுதம். ஊடகங்களில் சமூக நீதிக்கு எதிரானவர்களை உட்கார வைத்திருப்பவர்களைப் பார்த்தால் அடித்து துவைக்கத் தோன்றுகிறது.

விவசாயிகளுக்குத் தண்ணீர் இல்லை தூக்குப்போட்டு சாகுறான். பிரதமர் சொச்ச பாரத், மிச்சபாரத் சொல்லிட்டு ஜப்பான் போறார். நாம் தமிழர் கட்சியை சி.பா.ஆதித்தனார் தொடங்கினார். ரஜினி, கமலுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் சீமானுக்கும் கொடுக்க வேண்டும். நாம் தமிழர் தூய்மையான கட்சி. மீடியாக்கள் மக்களுக்காக உழைப்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மனித ஜந்து, அதை எந்த ஜெயிலில் அடைக்கலாம் என்றுகூட தெரியவில்லை அப்படிப்பட்ட ஜெயக்குமாரின் பேட்டிகளையெல்லாம் போடுறீங்க'' என்று பாய்ந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!