ஜனாதிபதி வருகை எதிரொலி! வேலூரில் 7 அடுக்குப் பாதுகாப்பு

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருவதால், வேலூரில் 7 அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

குடியரசு தலைவர்

வேலூருக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகையையொட்டி, வேலூரில் 7 அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் திருவண்ணாமலை, ஆரணி, ஒடுக்கத்தூர், அணைக்கட்டு போன்ற ஊர்களுக்குச் செல்பவர்கள், 20 கி.மீ சுற்றிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

வேலூர் சி.எம்.சி., மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் நடக்கும் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்கிறார். அங்கிருந்து ஸ்ரீநாராயணி பீடம் தங்கக்கோயிலுக்குச் சென்று, அங்கு நடைபெறும் சிறப்பு யாகத்தில் கலந்துகொள்கிறார். அதன் பிறகு, ஸ்ரீநாராயணி  ரிசர்ச் மருத்துவமனைக்குச் சென்று, சிறுநீரக மாற்று மற்றும் இதய நோய் சிகிச்சைகளுக்கு புதிய பிரிவைத் தொடங்கிவைக்கிறார். அதன் பிறகு, மாலை 4.30 மணிக்கு சென்னைக்குப் புறப்படுகிறார். இதற்காக, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டதால் பொதுமக்கள் வெயிலில் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். 

வேலூர்-திருவண்ணாமலை இடையிலான போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. வாகனங்கள் அனைத்தும் ஆற்காடு-சலமநத்தம்-கொங்கராம்பட்டு-கண்ணமங்கலம் வழியாக வந்து செல்ல வேண்டும். வேலூரில் இருந்து அணைக்கட்டு, ஒடுக்கத்தூருக்கு வந்து செல்லும் பேருந்துகள் அனைத்தும், இலவம்பாடி-அப்துல்லாபுரம் வழியாக வந்து செல்ல வேண்டும். வேலூர் 1-ம் எண் நகரப் பேருந்துகள், லட்சுமி திரையரங்கம் வரை இயக்கப்படும்.  வேலூர் 2-ம் எண் நகரப் பேருந்துகள், ஓட்டேரி வரை மட்டும் இயக்கப்படும்.அடுக்கம்பாறை மருத்துவமனைக்குச் செல்பவர்கள், இருசக்கர வாகனத்தில் ஓட்டேரி,கட்டுப்படி,மூஞ்சூர்பட்டு வழியாக அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரிக்குச் செல்ல வேண்டும். இந்தப் போக்குவரத்து மாற்றம், மே 4- ம் தேதி அன்று காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை அமலில் இருக்கும் என வேலூர் காவல்துறை தெரிவித்துள்ளது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!