வெளியிடப்பட்ட நேரம்: 12:29 (04/05/2018)

கடைசி தொடர்பு:12:36 (04/05/2018)

எம்.ஐ.டி மாணவர்களுக்கு ஆலோசகரானார் நடிகர் அஜித்! சம்பளம் 1,000 ரூபாய்

தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்கள் பட்டாளத்தை தனக்கென சேர்த்து வைத்திருப்பவர் நடிகர் அஜித். வருடத்துக்கு ஒருமுறை இவரது படம் தமிழில் ரிலீஸ் ஆனாலும் இவருக்கு இருக்கின்ற ரசிகர்கள் பட்டாளம் மட்டும் குறைந்ததே இல்லை. அதற்கு அஜித்தின் தனிப்பட்ட கேரக்டர்கள்தான் காரணம் எனப் பலரும் கூறிவருகின்றனர். இந்நிலையில், தற்போது அஜித் தனது அடுத்தப் படமான 'விசுவாசம்' படத்துக்காக முழு வீச்சில் ரெடியாகி வருகிறார். இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு இன்னும் ஆரம்பிக்காத நிலையில் அஜித் சில நாள்களுக்கு முன்பு ஏரோ மாடலிங்-கில் தனது கவனத்தைத் திருப்பினார். இதற்காகக் குரோம்பேட்டையிலுள்ள எம்.ஐ.டி கல்லூரியின் ஏரோ மாடலிங் துறைக்கு விசிட் அடித்தார். 

அஜித்

இந்நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆளில்லா விமான சோதனை பைலட்டாகவும், அந்த அமைப்பின் ஆலோசகராகவும் அஜித்தை பல்கலைக்கழகம் நியமித்துள்ளது. செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்தில் ஆளில்லா விமானம் தொடர்பான போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். இவர்கள் உருவாக்கும் ஆளில்லா விமானத்துக்கு ஆலோசகராகவும் சோதனை பைலைட்டாகவும் நடிகர் அஜித் நியமிக்கபட்டுள்ளார். ஒருமுறை பயிற்சி அளிக்க இதற்காக அஜித்துக்கு கொடுக்கப்படும் சம்பளம் ஆயிரம் ரூபாய் மட்டுமே. இதையும் ஏழை மாணவர்களின் கல்விக்கு வழங்குமாறு அஜித் கூறியுள்ளாராம். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க