''லஞ்சம் வாங்க மறுத்ததால் அரசு அதிகாரியை சுட்டுக் கொன்றேன்!- தொழிலதிபர் அதிர்ச்சி வாக்குமூலம்

லஞ்சம் வாங்க மறுத்த பெண் அதிகாரி சுட்டுக் கொலை

''லஞ்சம் வாங்க மறுத்ததால் அரசு அதிகாரியை சுட்டுக் கொன்றேன்!- தொழிலதிபர் அதிர்ச்சி வாக்குமூலம்

ஞ்சம் வாங்க மறுத்ததால், பெண் அதிகாரியை சுட்டுக் கொலை செய்ததாக ஹிமாச்சலபிரதேசத்தைச் சேர்ந்த ஹோட்டல் அதிபர் போலீஸில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். 

லஞ்சம் வாங்க மறுத்த பெண் அதிகாரி கொலை

ஹிமாச்சலப்பிரதேச தலைநகர் சிம்லாவில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில், சோலன் மாவட்டத்தில் உள்ள தரம்பூரில், விதி முறைகளை மீறி ஏராளமான ரிசார்ட்கள் கட்டப்பட்டிருந்தன. ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட 13 கட்டடங்களை இடித்துத்தள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தரம்பூரில் உள்ள, நாராயணி கெஸ்ட் ஹவுஸை இடித்துத்தள்ளும் பணியில் நகர திட்டமிடல் பெண் அதிகாரி ஷேல் பாலா தலைமையில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். ஹோட்டல் உரிமையாளர் விஜய் சிங், அரசு அதிகாலி ஷேல் பாலாவுக்கு லஞ்சம் தருவதாகப் பேரம் பேசியுள்ளார். ஆனால், பாலா மசியவில்லை. 

இதனால் ஆத்திரமடைந்த ஹோட்டல் உரிமையாளர் விஜய் சிங், ஹோட்டலுக்குள் சென்றார். பின்னர், உள்ளேயிருந்து அரசு அதிகாரி ஷேல்  பாலாவை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.  குண்டு பாய்ந்த ஷேல் பாலா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஊழியர்கள் இருவர் காயமடைந்தனர். அதிகாரிகள்மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு, விஜய் சிங் தப்பி ஓடிவிட்டார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்த, தலைமறைவான விஜய் சிங்கைப் பிடிக்கும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுவந்தனர். 

உத்தரப்பிரதேசத்தில் பதுங்கியிருந்த விஜய் சிங்கை, நேற்று போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்தினர். அப்போது, ''அரசு அதிகாரி ஷேல் பாலா லஞ்சம் வாங்க மறுத்தார். அதோடு, ஹோட்டல்களை இடிக்கும் பணியில் தீவிரமாக இருந்தார். அதனால், அவரை சுட்டுக் கொன்றேன்'' என்று வாக்குமூலம் அளித்துள்ளார். 

ஆக்கிரமிப்பை அகற்றிய அரசு அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டதால் அதிர்ச்சியடைந்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!