‘நம்ம சென்னை’ மக்களின் குறைகளைக் கேட்க புதிய செயலி

சென்னை மாநகராட்சி சார்பில் மக்களின் குறைகளைத் தீர்க்கும் நோக்கில் புதிய மொபைல் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆப்

முன்பெல்லாம் மக்கள் தங்களின் குறைகளைச் சொல்ல அரசியல் தலைவர்கள், அதிகாரிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில் பல மணி நேரம் காத்திருந்து, தங்களின் குறைகளை மனுவாக எழுதித் தரவேண்டும். ஆனால், நாம் தற்போது டிஜிட்டல் உலகில் வாழ்ந்து வருவதால் நமது செயல்பாடுகளும் மாறிப் போய் உள்ளது.

அதன்படி, சென்னை மாநகராட்சி முன்னதாக இணையதளம் மூலம் மக்களின் குறைகளை கேட்கும் ஆன்லைன் புகார் பக்கத்தைச் செயல்படுத்தி வருகிறது.  இதைத் தொடர்ந்து தற்போது, மக்களின் குறைகளைத் தீர்க்கும் நோக்கில் ‘நம்ம சென்னை’ என்ற புதிய மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் என இரு பயனாளர்களுக்கும் ஏற்ற வகையில் இந்தச் செயலியில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதி மற்றும் குறைகளைப் பதிவு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கீழ்க்கண்ட யு.ஆர்.எல் லிங்க்கை க்ளிக் செய்து நம்ம சென்னை செயலியை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

ஆண்ட்ராய்டு பயனர்கள் : https://play.google.com/store/apps/details?id=com.ceedeev.grivenancev2

ஐஓஎஸ் பயனர்கள் :  https://itunes.apple.com/us/app/namma-chennai-gcc/id1346676062?ls=1&mt=8

Do you like the story?

Please Appreciate the Author by clapping!