`நீட் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்ததில் குளறுபடி' - குமரி மாணவிகள் கண்ணீர்

நீட் தேர்வுக்கான செண்டர் ஒதுக்கியதில் கடும் குழறுபடி உள்ளது என எரணாகுளத்தில் தேர்வு எழுத செல்லும் மாணவிகள் கண்ணீருடன் தெரிவித்தனர்.

நீட் தேர்வுக்கான சென்டர் ஒதுக்கியதில் கடும் குளறுபடி உள்ளது என எர்ணாகுளத்தில் தேர்வு எழுதச் செல்லும் மாணவிகள் கண்ணீருடன் தெரிவித்தனர்.

#HelpNEETStudents

நீட் தேர்வுக்காகக் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு கேரள மாநிலத்தின் நெய்யாற்றுன்கரை, எர்ணாகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சென்டர் போடப்பட்டுள்ளது. நாகர்கோவிலைச் சேர்ந்த அர்ஷியா என்ற மாணவிக்கு எர்ணாகுளத்தில் சென்டர் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாணவி அர்ஷியா கூறுகையில், "நான் 20 நாள்களுக்கு முன்பாக விண்ணப்பித்தேன். எனக்கு அடுத்த நாள் விண்ணப்பித்த மாணவிக்கு சென்னையில் சென்டர் போட்டிருக்கிறார்கள். அதன்பிறகு போட்ட மாணவர்களுக்கு குமரி மாவட்ட எல்லையான நெய்யாற்றின்கரை சென்டர் கிடைத்தது. தேர்வு மையம் ஒதுக்கியதில் கடும் குளறுபடி இருக்கிறது" என்றார். அவரின் பெற்றோர் கூறும்போது, "எர்ணாகுளத்திலிருந்து மேலும் 15 கிலோ மீட்டர் சென்றால்தான் என் மகளின் தேர்வு மையமான ஸ்ரீநாராயணா வித்யா கேந்திரம் பள்ளி உள்ளது. கோர்ட் ஆர்டர் எங்களுக்கு சாதகமாக வரும் என நம்பி இருந்தோம். ஆனால், எதிர்பார்த்தபடி அமையவில்லை. எனக்கு இரண்டு மகள்கள். ஒருமகளை வீட்டில் விட்டுவிட்டுச் செல்ல முடியாது என்பதால், குடும்பத்துடன் நாளை காலை 10 மணிக்கு ரயிலில் எர்ணாகுளம் செல்ல முடிவு செய்துள்ளோம். அங்கு சென்று தேர்வு மையத்துக்கு அருகிலேயே ரூம் வாடகைக்கு எடுத்து நாளை இரவு தங்க வேண்டும். எப்படியும் குறைந்தது 6,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை செலவு ஆகும்" என்றார் வருத்தத்துடன்.

நாகர்கோவிலைச் சேர்ந்த பூமிகா என்ற மாணவி கூறும்போது, "எர்ணாகுளம் அல் அமீன் கல்வி நிறுவனத்தில் எனக்கு சென்டர் போட்டிருக்கிறார்கள். நீட் தேர்வு விண்ணப்பம் தொடங்கிய நான்காவது நாள் நான் விண்ணப்பித்துவிட்டேன். எனக்கு எர்ணாகுளத்தில் சென்டர் போட்டிருக்கிறார்கள். நான் விண்ணப்பித்த சில நாள்களுக்குப் பிறகு விண்ணப்பித்தவர்களுக்கு திருநெல்வேலி சென்டரில் தேர்வு மையம் கிடைத்திருக்கிறது. ஒரே குழப்பமாக உள்ளது" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!