`மருத்துவம் சேவைதான்; வணிகம் அல்ல' - சி.எம்.சி மருத்துவக் கல்லூரி விழாவில் ஜனாதிபதி பேச்சு

மருத்துவத்துறை சேவை சார்ந்ததாக இருக்க வேண்டும். வணிகம் சார்ந்ததாக இருக்கக் கூடாது என்று வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரி விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசினார்.

ராம்நாத் கோவிந்

வேலூரில் உள்ள கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியின் (சி.எம்.சி) நூற்றாண்டு விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு நூற்றாண்டு மலரை வெளிட்டு சிறப்புரையாற்றினார். இதில் அவர் பேசுகையில், "இந்தியாவில் கடந்த நான்கு ஆண்டுகளில் 20% விகிதம் மருத்துவ இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தற்போது 67,382 இடங்கள் உள்ளன. இந்திர தனூஷ் திட்டம் கொண்டுவரப்பட்டதன் மூலம் கருவூற்ற தாய்மார்கள், குழந்தைகள் என விடுபட்டவர்களுக்குத் தடுப்பூசிகள் போடப்பட்டதன் மூலம், மலேரியா உட்பட்ட காய்சல்கள் தடுக்கப்பட்டுள்ளன. மேலும், தமிழ்நாடு சுகாதாரத்துறை இந்தியாவிலேயே முன்னோடியாக உள்ளது. மருத்துவத்துறை என்பது சேவையாக இருக்க வேண்டும். வணிகம் சார்ந்ததாக இருக்கக் கூடாது.

இந்தியாவிலேயே தமிழக சுகாதாரத்துறை முன்னோடியாக உள்ளது. இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தெல்லாம் மருத்துவம் பார்க்க தமிழகம் வருகின்றனர்" என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!