``நான் வாழத் தகுதியற்றவன்''- சிறுமியை வன்கொடுமை செய்த முதியவர் தற்கொலை

ஆந்திராவில் 9 வயதுச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் தற்கொலை செய்து கொண்டார்.

``நான் வாழத் தகுதியற்றவன்''- சிறுமியை வன்கொடுமை செய்த முதியவர் தற்கொலை

ந்திராவில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர், `நான் வாழ தகுதியற்றவன்' என்று மகனிடம் போனில் கூறி விட்டு தற்கொலை செய்து கொண்டார். 

சிறுமியை பலாத்காரம் செய்தவர் தற்கொலை

ஆந்திர மாநிலம் குண்டூரில் 9 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல்வர் சந்திரபாபு நாயுடு கடும் கண்டனம் தெரிவித்தார். `சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் சுட்டுக் கொல்லப்பட வேண்டும் அல்லது தூக்கிலடப்பட வேண்டும்' என்று கோஷம் எழுப்பியவாறு மக்கள் போராட்டத்தில் நேற்று முதல் ஈடுபட்டு வந்தனர். போராட்டம் காரணமாக குண்டூரில் அசாதாரண சூழல் நிலவியது.

இந்நிலையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சுப்பையா என்ற 60 வயது முதியவர், தன் மகனுக்கு போன் செய்து, ``என்ன ஒரு காரியம் செய்து விட்டேன். உனக்குத் தீராத அவமானத்தை ஏற்படுத்தி விட்டேன். நான் வாழத் தகுதியற்றவன்'' என்று கூறிவிட்டு போன் இணைப்பைத் துண்டித்துள்ளார். பின், மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

ரிக்ஷா தொழிலாளியான சுப்பையா தான் வசித்து வந்த வீட்டருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். `வெளியே யாரிடமாவது கூறினால் கொன்று விடுவேன்' என்று மிரட்டி சிறுமியை அனுப்பியுள்ளார். வீட்டில் சிறுமி வலியால் துடிப்பதைக் கண்டு தாய் பதறிப் போனார். ரத்தப் போக்கும் இருந்துள்ளது. உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தையல் போட்ட பின்னரே, ரத்தப் போக்கு நின்றுள்ளது. சிறுமி தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். 

இதையடுத்து, தலைமறைவான சுப்பையா குண்டூரிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு மரத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!