தூத்துக்குடியில் 7 மாதங்களுக்குப் பின் நடந்த மீனவர் கூட்டத்தைப் புறக்கணித்த மீனவர்கள்

தூத்துக்குடியில் 7 மாதங்களுக்குப் பின் நடைபெற்ற மீனவர் குறைதீர் கூட்டத்தில், 14 மீனவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மீனவர்கள் பலர் புறக்கணித்ததால் பெயருக்கு நடத்தி முடிக்கப்பட்டது.

தூத்துக்குடியில் 7 மாதங்களுக்குப் பின் நடைபெற்ற மீனவர் குறைதீர் கூட்டத்தில், 14 மீனவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மீனவர்கள் பலர் புறக்கணித்ததால் குறைதீர் கூட்டம் பெயருக்கு நடத்தி முடிக்கப்பட்டது.

fishermans grivance in thoothukudi

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை அன்று மீனவர் குறைதீர் கூட்டம் நடைபெறும். கடந்த 2017 செப்டம்பர் மாதம்தான் கடைசியாக மீனவர் குறை தீர் கூட்டம் நடைபெற்றது. அதன் பின் வந்த மாதங்களில், ஒகி புயலின் பாதிப்புகள் போன்ற இயற்கை சீற்றங்கள், நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் இடையே நிலவி வந்த பிரச்சினைகள் ஆகியவை காரணமாக  கூட்டம் நடைபெறவில்லை.

இந்நிலையில் மீனவர்களின் மீன்பிடித் தடைக்காலம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மீனவர்கள் போராட்டம் போன்ற சூழ்நிலைகளுக்கு மத்தியில் 7 மாதங்களுக்குப் பிறகு, இன்று மீனவர்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். மீன்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், 14 மீனவர்களே கலந்து கொண்டனர். 40-க்கும் மேற்பட்ட இருக்கைகள் காலியாகக் கிடந்தன. 

fishermans grivance in thoothukudi

இதில் பேசிய புதியதுறைமுகம், மீனவர்கூட்டுறவுச் சங்கத்தலைவர் மாரியப்பன், ``தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்பிக் உரத்தொழிற்சாலையின் கழிவுகளை கடற்கரைப் பகுதியில் அதிகமாக வெளியேற்றி வருகின்றனர். இதனால் புதிய துறைமுகம் முதல் முள்ளக்காடு கோவளம் கடற்கரைப் பகுதிகள் வரை மீன்கள் கொத்துக் கொத்தாக இறந்து மிதந்தன. இது குறித்து மத்திய கடல் ஆராய்ச்சி நிறுவனத்தின் குழுவினர் ஆய்வு செய்தனர். ஆய்வறிக்கை என்ன ஆனது எனத் தெரியவில்லை. இந்தக் கடல் நீரை எங்களது பகுதி மீனவர்களில் சிலர், தனியார் ஆய்வகத்தில் பரிசோதனை செய்து பார்த்ததில் அதில், அளவுக்கு அதிகமான அமோனியா கலந்து உள்ளதாக தெரியவந்துள்ளது. இரண்டு முறை இப்படி நடந்துள்ளது.

இந்தக் கழிவுகள் கடலில் கலப்பதால் மீன்கள், நண்டுகள், டால்ஃபின்கள் ஆகிய கடல் வாழ்வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன. இதனால் கடற்பாசிகள் அழுகி, அதன் உற்பத்தியும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து மனு அளிக்கப்பட்டும் முறையான நடவடிக்கை இல்லை.” எனக் குற்றம் சாட்டினார். மற்ற மீனவர்களும் இதே குறையைத் தொடர்ந்து சொல்ல, ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.  நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்கள் பிரச்னை விஸ்வரூபம் எடுக்கும் என அதிகாரிகள் கலக்கத்தில் இருந்த நிலையில், கூட்டத்தை மீனவர்கள் புறக்கணித்ததால், 1 மணி நேரத்திலேயே பெயருக்கு நடத்தி முடிக்கப்பட்டது.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!