`மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம்..!' - மே 7-ம் தேதி அடிக்கல் நாட்டு விழா | Jayalalitha Memorial at Marina Beach

வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (05/05/2018)

கடைசி தொடர்பு:08:32 (05/05/2018)

`மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம்..!' - மே 7-ம் தேதி அடிக்கல் நாட்டு விழா

ஜெயலலிதா நினைவிடம்

''மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்கக் கூடாது; மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர் சமாதிகளை அகற்ற வேண்டும்' என சமூக ஆர்வலர், ' டிராபிக் ராமசாமி' சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், ''அரசு செலவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கக் கூடாது'' என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்நிலையில், ஜெயலலிதா நினைவிடம் கட்ட அடிக்கல் நாட்டும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

சென்னை மெரினா கடற்கரையில் அ.தி.மு.க சார்பில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க இருக்கிறார்கள். அதற்கான அடிக்கல் நாட்டு விழா மே 7-ம் தேதி நடைபெறுகிறது. இது தொடர்பாக, முதல்வரும் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், ''மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினாவில் நினைவிடம் அமைக்க அடிக்கல் நாட்டும் விழா, வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது. காலை 8.30 மணியளவில், அ.தி.மு.க சார்பில் விழா நடைபெற உள்ளது.  இதில் தொண்டர்களும், பொதுமக்களும் கலந்துகொள்ள  வேண்டும்'' என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க