வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (05/05/2018)

கடைசி தொடர்பு:07:04 (05/05/2018)

கத்துவா சிறுமி வழக்கறிஞர் தீபிகாவை பாராட்டிய ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன்!

பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட காஷ்மீர் சிறுமிக்காக நீதிமன்றத்தில் வாதாடும் வழக்கறிஞர் தீபிகா சிங்கைப் பாராட்டி ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன் ட்வீட் செய்துள்ளார்.

பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட காஷ்மீர் சிறுமிக்காக நீதிமன்றத்தில் வாதாடும் வழக்கறிஞர் தீபிகா சிங்கைப் பாராட்டி ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன் ட்வீட் செய்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில், சிறுமியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்துக்கு எதிராக இந்தியா முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. இந்தக் கொடுஞ்செயலில் ஈடுபட்ட 8 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

எம்மா வாட்சன்

இந்த வழக்கு விசாரணை, ஜம்மு-காஷ்மீர் மாவட்ட நீதிமன்றத்தில் தற்போது நடந்துவருகிறது. இதில், தீபிகா சிங் என்ற பெண் வழக்கறிஞர் சிறுமிக்காகத் தொடர்ந்து வாதாடிவருகிறார். அவருக்கு வந்த மிரட்டல்களைத் தொடர்ந்து, உரிய பாதுகாப்பு வழங்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில்,  ஹாரிபாட்டர் திரைப்படங்களின் மூலம் உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன், வழக்கறிஞர் தீபிகாவைப் பாராட்டி ட்வீட் செய்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கட்டுரை ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், வழக்கறிஞர் தீபிகா சிங்கின் நேர்மை குறித்து கூறப்பட்டுள்ளது. அந்தக் கட்டுரையைப் பகிர்ந்துள்ள எம்மா வாட்சன், ``எல்லா சக்தியும் தீபிகா சிங்குக்கு’’என்று பதிவிட்டுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க