கேரளா சென்றுள்ள தமிழக மாணவர்கள் அவதி..! #LetsHelpNEETStudents

நீட் தேர்வு எழுத கேரளா சென்றுள்ள மாணவ மாணவிகள், தங்குவதற்கு விடுதிகள் கிடைக்காமல் அல்லல்பட்டுவருகின்றனர்.

கோப்புப்படம்

மருத்துவப் படிப்புக்காக நீட் தேர்வு எழுத உள்ள தமிழக மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதனால், தமிழக மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தமிழக மாணவர்கள் சுமார் 5 ஆயிரம் பேருக்கு, கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதனால், மாணவர்கள் எர்ணாகுளத்துக்கு படையெடுத்துள்ளனர்.  எர்ணாகுளம் ரயில்நிலையம், பேருந்து நிலையம் அருகிலுள்ள விடுதிகளில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், உணவு விடுதிகளில் உணவுக் கட்டணமும் அதிகமாக உள்ளது என்று பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். பெருமளவில் மாணவ மாணவிகள் குவிந்ததால், விடுதிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழக மற்றும் கேரள அரசுகள் தரப்பில் உதவி மையங்கள் ஏதும் இதுவரை அமைக்கப்படவில்லை என மாணவர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!