300 சிக்ஸர்கள் விளாசிய முதல் இந்திய வீரர் ரோகித் சர்மா! | Rohit Sharma becomes 1st Indian to hit 300 sixes in T20 cricket

வெளியிடப்பட்ட நேரம்: 12:05 (05/05/2018)

கடைசி தொடர்பு:14:49 (05/05/2018)

300 சிக்ஸர்கள் விளாசிய முதல் இந்திய வீரர் ரோகித் சர்மா!

டி 20 தொடரில் ரோகித் சர்மா 300 சிக்ஸர்கள் விளாசிய முதல் இந்திய பேட்ஸ்மேன்.

300 சிக்ஸர்கள் விளாசிய முதல் இந்திய வீரர் ரோகித் சர்மா!

'டி-20 கிரிக்கெட்டில், 300 சிக்ஸர்கள் விளாசிய முதல் இந்தியர்' என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார். 

ரோகித் சர்மா

கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தின்போது, முஜிபுர் ரஹ்மான் வீசிய 17-வது ஓவரில் இந்த மைல்கல் சாதனையை எட்டினார் ரோகித். மும்பையைச் சேர்ந்த ரோகித் சர்மா, 78 சிக்ஸர்களை சர்வதேச போட்டியிலும் 183 சிக்ஸர்களை ஐபிஎல் தொடரிலும் அடித்துள்ளார். சாம்பியன்ஸ் லீக், சையத் முஸ்டாக் அலி தொடர்களில் 40 சிக்ஸர்களும் ரோகித்தின் கணக்கில் உள்ளன. 

அதிக சிக்ஸர்கள் அடித்துள்ள வீரர்கள் பட்டியலில், வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் 844 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார். பொல்லார்ட் 555, பிரன்டன் மெக்கல்லம் 445, ட்வைன் ஸ்மித் 376, டேவிட் வார்னர் 319, ரோகித் 301 சிக்ஸர்களை விளாசியுள்ளனர். ஐபிஎல் போட்டியிலும் கெயில்தான் அதிக சிக்ஸர்களை அடித்து முதலிடத்தில் உள்ளார். இவர் கணக்கில் 290 சிக்ஸர்கள் உள்ளன. ரோகித்துக்கு பட்டியலில் இரண்டாவது இடம். தோனி , சுரேஷ் ரெய்னா தலா 180 சிக்ஸர்களும் ஏபிடி 179 சிக்ஸர்களும் விளாசியுள்ளனர்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க