ஆறு குடியரசுத் தலைவர்களை உருவாக்கியது சென்னைப் பல்கலைக்கழகம்..! ராம்நாத் கோவிந்த் பெருமை

'நாட்டின் 6 குடியரசுத் தலைவர்களை உருவாக்கிய பெருமை சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு உண்டு' என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். 

சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார். அப்போது, 'தமிழ் மொழி மிகவும் தொன்மையான மொழி. நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க பல்கலைக்கழகங்களில் ஒன்று சென்னைப் பல்கலைக்கழகம். நாட்டின் 6 குடியரசுத் தலைவர்களை உருவாக்கிய பெருமை சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு உண்டு. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் இருவர் இங்கு கல்வி பயின்றவர்கள். குடியரசுத் தலைவர் மாளிகை, தனிநபர் சொத்தல்ல. அனைவரும் வந்து பார்வையிடலாம்' என்று தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!