நீட் தேர்வுக்காக எர்ணாகுளம் வழியாகச் செல்லும் ஏரநாடு எக்ஸ்பிரஸ் நேரம் மாற்றம்!

கன்னியாகுமரி மாவட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதற்காக எர்ணாகுளம் செல்லும் விதமாக ஏரநாடு எக்ஸ்பிரஸ் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ன்னியாகுமரி மாவட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதற்காக எர்ணாகுளம் செல்லும் விதமாக ஏரநாடு எக்ஸ்பிரஸ் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நாகர்கோவில் ஜங்சன்


நாகர்கோவிலிலிருந்து எர்ணாகுளம் வழியாக மங்களூர் செல்லும் ஏரநாடு எக்ஸ்பிரஸ் ரயில் அதிகாலை 2 மணிக்கு நாகர்கோவிலிருந்து புறப்பட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் பாலக்காடு கோட்டத்தில் வடகரை மற்றும் திக்கோட்டை இடையே ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் இரவு நேரத்தில் நடந்துவந்தது. இதற்காக மே மாதம் முழுவதும் நாகர்கோவிலிலிருந்து அதிகாலை 3.30 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும் வகையில் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வுக்காக கேரள மாநிலத்தின் நெய்யாற்றின்கரை, எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்வு மையம் போடப்பட்டிருந்தது. இதனால் தேர்வு மையங்களுக்குச் செல்வதில் பல பிரச்னைகள் இருந்துவந்தன. அதிலும் குமரி மாவட்டத்தில் அதிகபடியான மாணவர்களுக்கு எர்ணாகுளத்தில் தேர்வு மையம் போடப்பட்டிருக்கிறது. இதையடுத்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் எர்ணாகுளம் செல்லும் மாணவர்களுக்கு வசதியாக ரயில் போக்குவரத்தை மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி எர்ணாகுளம் செல்லும் ஏரநாடு எக்ஸ்பிரஸ் ரயில் நாளை அதிகாலை 2 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், ``அதிகாலை 3.30 மணிக்குப் புறப்படும் ஏரநாடு எக்ஸ்பிரஸ் ரயில் காலை 9.50 மணிக்கு எர்ணாகுளம் ரயில் நிலையம் சென்று சேரும். அதிகாலை 2 மணிக்கு ரயில் நாகர்கோவிலிலிருந்து புறப்பட்டுச் சென்றால் காலை 7.50 மணிக்கு எர்ணாகுளம் ஜங்சனுக்கு சென்றுசேரும்.  நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் அங்கிருந்து காலை 10 மணிக்குள் தேர்வு மையத்துக்குச் சென்றுவிட முடியும்'' என்றார். கேரள மாநிலத்தின் அனைத்து ரயில் நிலையங்கள் மற்றும் பஸ் ஸ்டாண்டுகளில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான உதவி மையம் அமைக்கப்பட்டிருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் ஏற்கெனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!