வெளிமாநிலத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழில் கேள்வித்தாள்!- பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்

விருப்பத்தின் பேரில் மாநிலம் தாண்டி நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு தமிழில் கேள்வித்தாள் கொடுப்பதற்கு எனது அலுவலகம் மூலம் ஏற்பாடு செய்யபட்டுள்ளது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

விருப்பத்தின் பேரில் மாநிலம் தாண்டி நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு தமிழில் கேள்வித்தாள் கொடுப்பதற்கு எனது அலுவலகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பொன் ராதாகிருஷ்ணன்

மத்திய அரசின் கிராம தன்னாட்சி இயக்க தொடர் நிகழ்ச்சி மற்றும் திறன் மேம்பாடு தினம் இன்று குலசேகரம் ராமகிருஷ்ணா இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.சி. ஸ்கூலில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``நீட் விவகாரத்தில் மாணவர்கள் எந்தச் சிரமமும் இல்லாமல் வீட்டில் இருந்து அல்லது படித்த இடத்தில் இருந்து தேர்வு எழுதச் செல்வதே உகந்ததாக இருக்கும் என்பதே என் கருத்து. விருப்பத்தின் பேரில் மாநிலம் தாண்டி நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு தமிழில் கேள்வித்தாள் கொடுப்பதற்கு எனது அலுவலகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்வு எழுத வேறு மாநிலம் செல்லும் மாணவர்களுக்கான செலவுத்தொகையை அரசு கொடுக்கிறது. நீட் தேர்வில் மத்திய அரசு தோல்வி அடைந்ததா என நீங்கள் கேட்கிறீர்கள். நீட் தேர்வைப் பொறுத்தமட்டில் 99 சதவிகிதம் சரியாக உள்ளது, ஒரு சதவிகிதம் தவறு நடந்துள்ளது. மாணவர்களுக்கும் அரசுக்கும் எந்தப் போட்டியும் இல்லை. இதில் சிலர் அரசியல் செய்கின்றனர். சீமான், ஸ்டாலின் போன்றோர் தமிழகத்தில் அறிக்கை கொடுக்கும் தலைவர்களாக இருந்து வருகின்றனர். கர்நாடாக மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் வந்தால் காவிரியில் தண்ணீர் கிடைக்காது" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!