குடிப்பதை தட்டிக்கேட்ட மனைவி! - மகன்களுக்கு விஷம் கொடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட தந்தை | Cuddalore: Man commits suicide, after poisoning two sons

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (05/05/2018)

கடைசி தொடர்பு:18:40 (05/05/2018)

குடிப்பதை தட்டிக்கேட்ட மனைவி! - மகன்களுக்கு விஷம் கொடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட தந்தை

இன்று காலையில் வேலைக்குச் செல்லாமல் இப்படி தினம் குடித்துவிட்டு வருகிறீர்களே என வெண்ணிலா கேட்டு கணவரைத் திட்டியுள்ளார். பின்னர் வெண்ணிலா வெளியே கிளம்பிச் சென்றுள்ளார். மனைவி திட்டியதால் மனமுடைந்த கார்த்திகேயன் கூல்டிரிங்ஸ்சில் விஷம் கலந்து அவரும் குடித்துவிட்டு, தனது இரண்டு மகன்களுக்கும் கொடுத்துள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெரும் மகன்கள்

குடிப்பதை மனைவி தட்டிக்கேட்டதால் தனது இரண்டு மகன்களுக்கு குளிர்பானத்தில் விஷத்தை கலந்துகொடுத்தார் தந்தை. சிகிச்சை பலனின்றி தந்தை உயிரிழந்தார். மகன்கள் இரண்டு பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடலூர் அருகே உள்ள புதுவண்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (40). கூலித் தொழிலாளி. 
இவரது மனைவி வெண்ணிலா (35). இவர்களுக்கு ஜீவானந்தம் (8), கீர்த்திவாசன் (7) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். கார்த்திகேயனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. தினமும் கார்த்திகேயன் மது அருந்தி வீட்டுக்கு வருவதால் கணவன், மனைவிக்குள் 
அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

``வேலைக்குச் செல்லாமல் இப்படி தினம் குடித்துவிட்டு வருகிறீர்களே?'' என வெண்ணிலா இன்று காலை கணவரைத் திட்டியுள்ளார். பின்னர் வெண்ணிலா வெளியே கிளம்பிச் சென்றுள்ளார். மனைவி திட்டியதால் மனமுடைந்த கார்த்திகேயன், குளிர்பானத்தில் விஷம் கலந்து அவரும் குடித்துவிட்டு, தனது இரண்டு மகன்களுக்கும் கொடுத்துள்ளார். வெளியே சென்ற வெண்ணிலா வந்து பார்த்தபோது கணவர் மற்றும் மகன்கள் இருவரும் மயங்கிக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உறவினர்கள் உதவியுடன் அவர்களை கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதில் கார்த்திகேயன் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். மகன்கள் ஜீவானந்தம், கீர்த்திவாசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குடும்பத் தகராறில் மகன்களுக்கு விஷம் கொடுத்து தந்தை உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.