வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (05/05/2018)

கடைசி தொடர்பு:19:20 (05/05/2018)

கோயிலாக மாறிய கல்லறை..! விசாரணைக்கு உத்தரவிட்ட ஆம் ஆத்மி அரசு

டெல்லியின், சஃப்தார்ஜங் என்க்ளேவ் பகுதியிலிருந்த கல்லறை இந்துக் கோயிலாக மாற்றப்பட்டிருந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த துணை முதல்வர் மணிஷ் சிஸ்சோடியா உத்தரவிட்டுள்ளார். 

டெல்லியின் சஃப்தார்ஜங் என்க்ளேவ் பகுதியில் பழுதடைந்த நிலையில் கல்லறை இருந்துள்ளது. அந்தக் கல்லறை புதுப்பிக்கப்பட்டு இந்துக் கோயிலாக மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், விசாரணை நடத்த கலை, பண்பாடு மற்றும் மொழியியல் துறை ஆணையருக்கு துணை முதல்வர் மணிஷ் சிஷ்சோடியா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்த அவருடைய உத்தரவில், 'நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பை உறுதிபடுத்துவது மாநில தொல்லியல் துறையின் கடமையாகும். அதில், தவறுகள் நடக்கும்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று குறிப்பிட்டுள்ளார்.