பினராயி விஜயனுக்கு அம்பேத்கர் சுடர் விருது!

பிரனாயி விஜயன்

2018-ம் ஆண்டுக்கான விருதுகள் பெறுவோர் பட்டியலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை, செம்மொழி ஞாயிறு ஆகிய ஆறு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சமூகநீதிக்கும், தமிழ் மொழி மேம்பாட்டுக்கும் பாடுபடுகிற சான்றோரைச் சிறப்பிக்கும் விதமாக இந்த விருதுகளை அளித்து வருகிறது. தி.மு.க தலைவர் கலைஞர், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் நல்லகண்ணு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் பலருக்கும் இவ்விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், 2018-ம் ஆண்டுக்கான விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் சான்றோரின் பட்டியலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று அறிவித்துள்ளார். அதன்படி, அம்பேத்கர் சுடர் விருது கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும், பெரியார் ஒளி விருது ஆந்திரத்தைச் சார்ந்த மக்கள் பாடகர் கத்தாருக்கும், காமராஜர் கதிர் விருது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசருக்கும், காயிதேமில்லத்  பிறை விருது ’வைகறை வெளிச்சம்’ இதழாசிரியர் மு.குலாம் முகமதுக்கும், அயோத்திதாசர் ஆதவன் விருது மருத்துவர் அ.சேப்பனுக்கும் (மறைவிற்குப் பின்), செம்மொழி ஞாயிறு விருது ’பெருங்கவிக்கோ’ வா.மு.சேதுராமனுக்கும் வழங்கப்படுகிறது. இந்த விருதுகள் வரும் 15-ம் தேதி மாலை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெறும் விழாவில் அளிக்கப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!